இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில், பார்லிமென்டில் நிறைவேறியது. நீண்ட விவாதத்திற்குப்பிறகு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், இந்த மசோதா, பெரும்பாலானோர் ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


10 சதவீத இட ஒதுக்கீடு, ஜனாதிபதி, ஒப்புதல்


ஜனாதிபதி,ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதனால், இந்த மசோதா, சட்டமானது. ஆண்டு வருமானம்,

Advertisement

8 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளோர், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் உள்ளோர், நகர்ப்பகுதியில், 900 சதுர அடிக்கு குறைவான வீடு உள்ளோர், இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தகுதி உடையோராக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (6+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
13-ஜன-201923:05:46 IST Report Abuse

ராம.ராசு ஆச்சரியமாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டால் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படமாட்டார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதுபற்றி பேச்சு இல்லாமல் போய்விட்டது. பத்து % முற்ப்பட்ட வகுப்பில் ஏழைகளுக்கு என்று சொன்னாலும் அதற்க்கு அளவு கோளாக எட்டு லட்சம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் SCST பிரிவுகளுக்கு அது இரண்டு லட்சம் என்பது மிகப்பெரிய முரண்பாடு. நம் நாட்டில் சமூக சமன்பாடு இல்லை என்பதால்தான் இட ஒதுக்கீடு முறையையே கொண்டுவந்தார்கள். அந்த இட ஒதுக்கீட்டு முறையையே முறையாக அமல்படுத்தவில்லை என்ப்ஹர்க்கு உதாரணம் சென்னை ஐ.ஐ.டியில் உள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கையே போதுமானது. அங்கு பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் மொத்தம் 480 . அதில் 467 இடங்களில் முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களே உள்ளார்கள். வெறும் 13 பேர்கள் மட்டுமே மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள். இட ஒதுக்கீட்டு முறை இருக்கும்போதே கிட்டத்தட்ட 97 % க்கு மேல் முற்பட்ட சாதியைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு உதாரணம் மட்டுமே. இன்னும் நாட்டின் அனைத்து பார்த்தால் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். ஆனால் இப்படி BC / MBC / பிக் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்த்விட்டு SC / ST தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை மட்டும் கொச்சைப் படுத்தப்படுவது வருத்தமானது. அவர்களுக்கு தகுதியில்லாமல் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அவர்கள் மீது குதர்க்கம் காட்டப்படுகிறது. சமூக சமத்துவம் இல்லாமல் இருந்ததால்தான் அனைத்தையும் ஒப்பீடு செய்து முந்தைய அரசியல் தலைவர்கள் இட ஒத்துகிட்டு முறையையே கொண்டுவந்தார்கள். சமூக சமத்துவம் இருந்துவிட்டால் இட ஒதுக்கீட்டு முறையே தேவை இல்லைதான். ஆனால் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் விளையாட்டுதான். இந்த பத்து % ஐ ஆதரிப்பவர்கள், சரி இனிமேல் சாதி இல்லாமல் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்போம் என்று சொல்ல முடியுமா... தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கொடுத்ததை காழ்புனர்வோடு சொன்னவர்கள், இப்போது இதற்க்கு சாதகமான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். என்ன சொல்ல....

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201914:11:46 IST Report Abuse

Yaro Oruvanவாவ்.. திரு ஜோதி N அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. எவ்வளவு கருத்துக்கள்? WELLDONE ஆனா நாங்க மோடியை திட்டிகிட்டேதான் இருப்போம். ஏன்னா எங்களுக்கு பொழப்பு ஓடனும்ல.. அதனால நீங்க எழுதுன கருத்தெல்லாம் எங்க மண்டையில ஏறாது.. பசுவதை / 15 லட்சம் சபாரி / ஆர் எஸ் எஸ் / மதச்சார்பின்மை / குஜராத் கலவரம் / டீ யாவாரி / மரண யாவாரி இப்படியே பொழுதை போக்குவோம்.. நாட்டு நலன் / பாதுகாப்பு / வளர்ச்சி இதைப்பத்தியெல்லாம் யோசிச்சு பாக்கக்கூட நாங்க ரொம்ப யோசிப்போம்.. ஏன்னா நாங்கெல்லாம் மதச்சார்பின்மைய காப்பாத்தியே தீரணும்னு படு பயங்கரமா ஒழைக்கிறோம்.. கஞ்சி குடிக்கக்கூட நேரமில்லை.. நாங்க எப்புடி நாட்டு வளர்ச்சியை பத்தி யோசிக்க முடியும்னு நீங்களே சொல்லுங்க.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜன-201908:29:25 IST Report Abuse

Srinivasan Kannaiyaஏன் நான்கு வருடங்கலாக செய்யாமல் இப்போ ஏன் செய்கிறீர்கள் என்று இவர் கூடகேள்வி கேட்கவில்லையே

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X