உ.பி.,யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கைகோர்ப்பு: தலா 38 லோக்சபா தொகுதிகளில் போட்டி Dinamalar
பதிவு செய்த நாள் :
கைகோர்ப்பு!
உ.பி.,யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள்...
தலா 38 லோக்சபா தொகுதிகளில் போட்டி

லக்னோ: அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த, பரம வைரிகளான, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கைகோர்த்துள்ளன. வரும் லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தில், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து, தலா, 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ், தேர்தல்லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில், கட்சிகள் தீவிரமாக உள்ளன. நாட்டிலேயே, அதிகபட்சமாக, 80 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட, உத்தர பிரதேசம், மிக முக்கியமான மாநிலம். கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், இங்குள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., 71 தொகுதி களிலும், அதன் கூட்டணிக் கட்சியான, அப்னா தளம், இரண்டு தொகுதி களிலும் வென்றன. சமாஜ்வாதி, ஐந்து தொகுதிகளிலும், காங்கிரஸ், இரண்டு தொகுதிகளிலும் வென்றன. அதன்பிறகு நடந்த, சட்டசபை தேர்தலில், பா.ஜ., வென்று, யோகி ஆதித்யநாத், முதல்வரானார். விரைவில், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், நீண்ட காலமாக, எதிர், எதிர் துருவங்களாக செயல்பட்டு வந்த, பரம வைரிகளான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

லக்னோவில் நேற்று நடந்த, பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மாயாவதியும், அகிலேஷும் இதை அறிவித்தனர். நிருபர்களிடம், மாயாவதி கூறியதாவது: பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து, உ.பி.,யில் சமீபத்தில் நடந்த, லோக்சபா இடைத் தேர்தலில், மூன்று தொகுதிகளிலும் வென்றோம். வரும் லோக்சபா தேர்தலிலும், எங்கள் கூட்டணி தொடரும். மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், இரு கட்சிகளும், தலா, 38 தொகுதிகளில் போட்டியிடுவோம். காங்கிரஸ்

தலைவர் ராகுலின் அமேதி மற்றும் மூத்த தலைவர் சோனியாவின், ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம். மீதமுள்ள, இரண்டு தொகுதிகளை, கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு ஒதுக்க உள்ளோம். இது குறித்து, பின்னர் அறிவிக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியின்போது, வறுமை, வேலை வாய்ப்பின்மை, ஊழல் அதிகரித்தது. பல்வேறு ராணுவத் தளவாடக் கொள்முதலில் ஊழல் செய்தது. அதனால், காங்கிரசுடன் கூட்டணி இல்லை. மேலும், காங்கிரசுடன் இணைவதால், எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதற்கு முன், எங்கள் இரு கட்சியும், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தோம். எங்கள் ஓட்டு,காங்கிரசுக்கு கிடைத்தது; ஆனால், காங்கிரஸ் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், காங்கிரசை கூட்டணியில் சேர்ப்பதில்லை என, முடிவு செய்தோம்.எங்களுடைய இந்தக் கூட்டணி, லோக்சபா தேர்தலுக்குப் பிறகும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மாயாவதியை, பிரதமர் வேட்பாளராக ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு நேரடி யாக பதிலளிக்காமல், சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் கூறியதாவது: உத்தர பிரதேசம், பல பிரதமர்களை அளித்துள்ளது; வரும் தேர்தலிலும், அது தொடரும். எங்கள் கூட்டணியில், முன்னாள் மத்திய அமைச்சர், அஜித் சிங்கின், ராஷ்ட்ரீய லோக் தளத்துக்கான தொகுதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணிக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் இன்று ஆலோசனை! :


பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி அமைத்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, மாநில நிர்வாகிகளுடன், காங்கிரஸ் கட்சியின், உ.பி., பொறுப்பாளரான, குலாம் நபி ஆசாத், இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இது குறித்து, குலாம் நபி ஆசாத் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், உ.பி.,யில் எவ்வாறு செயல்படுவது என, மாவட்டம் வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கட்சியின் மாநில நிர்வாகிகளுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். உ.பி.,யில் ஏற்கனவே, எங்களுடைய பிரசாரத்தை துவங்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

விரோதிகளின் கூட்டணி! :

இத்தனை ஆண்டுகளாக விரோதத்துடன், எதிர்த்து போட்டியிட்டு வந்த இரண்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. பா.ஜ.,வுக்கு எதிரான எந்தக் கூட்டணியும், அரசியல் ரீதியில் பலவீனத்தை ஏற்படுத்தும். வாரிசு அரசியல், ஊழலை வளர்த்து விடும்.யோகி ஆதித்யநாத் , உ.பி., முதல்வர், பா.ஜ.,

பழசை மறந்த மாயாவதி :


பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, 1995ல், நடந்த மோசமான சம்பவத்தை மறந்து, தற்போது, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த, 1995, ஜூன், 2ம் தேதி, அப்போதைய, உ.பி., முதல்வர் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துவிட்டு, லக்னோவில் உள்ள மீராபாய் கெஸ்ட் ஹவுசில் கட்சி, எம்.எல்.ஏ.,க்களுடன் மாயாவதி ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். ஆதரவு வாபசால் கொந்தளித்த சமாஜ்வாதி தொண்டர்கள், கெஸ்ட் ஹவுஸ் மீது தாக்குதல் நடத்தினர்; மாயாவதி இருந்த அறையை அடித்து நொறுக்கி, அவரை மோசமான வார்த்தைகளால் திட்டினர். அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறப்பட்டது. அந்த அறையில் இருந்த பகுஜன் சமாஜ், எம்.எல்.ஏ.,க்கள் கூட மாயாவதியை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரம்ம தத் திவேதி என்பவர், அங்கு வந்து, மாயாவதியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அந்த நாள், இந்திய அரசியல் வரலாற்றில், மிக மோசமான நாளாக கருதப்படுகிறது. இதன் மூலம், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 24 ஆண்டுகளுக்கு பின், பழைய சம்பவங்களை மறந்து, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (6+ 60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-201916:57:46 IST Report Abuse

Endrum Indianஇதுவும் ஒரு புது Strategy அதாவது பி.ஜெ.பியை எதிர்க்கும் ஆனால் காங்கிரசையும் அரை மனதாக ஆதரிக்கும் மக்கள் வோட்டு தங்களுக்கு கிடைக்கும் என்று தான் இந்த தலித் என்று சொல்லிக்கொள்ளும் கொள்ளைக்கார பணக்காரி + உறவுகளும் கொள்ளைக்காரர்கள் இவள் ஆட்சியில் கொள்ளைக்காரர்கள், ஆஸ்திரேலியாவில் படித்த ஆனாலும் அறிவற்றவான் இவன் அப்பனையும் அவன் தம்பி தங்கை உறவுகளையும் ஒதுக்கி வைத்த ஒருவனும் சேர்ந்த கூட்டு???இரண்டு முன்னாள் கொள்ளைக்கார முத(ல்)லை வர்கள் சேர்ந்தால் கொள்ளை அடிப்பது எப்படி என்று தான் அவள் சீரிய எண்ணம் என்று கூற முடியும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜன-201913:46:59 IST Report Abuse

Pugazh Vஎந்த மாநிலத்திலும் எவனும் பாஜகவை கிட்டே சேர்க்க மாட்டேங்கறாங்க. அந்த அளவுக்கு ஆணவம் அகங்காரம் திமிர் தெனாவட்டுகளுடன் எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டி அவமரியாதையாக அநாகரிகமாக வன்முறை தூண்டி பேசி, எழுதி.. பாஜக வெறுப்பு அரசியல் செய்து வருகின்றனர். இப்போது கடைசி காலத்தில்... பாஜக கூட்டணி வைத்தால் பேசாமலிருப்பதும், பிற கட்சி கூட்டணிகளை மீண்டும் அவமரியாதை அநாகரிகமாக விமர்சித்தும் பாஜக தனக்கு தானே குழி வெட்டி கொண்டிருக்கிறது. ஊடகங்கள் கூட சுயமாக யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஏனெனில் மக்கள் ஊடகங்களை நம்புவதும் குறைந்து விட்டது. இனி. ஓட்டுமெஷினும் தேர்தல் ஆணையருமே கதி.

Rate this:
tamil - coonoor,இந்தியா
13-ஜன-201909:06:13 IST Report Abuse

tamilபி.ஜெ.பி க்கு மிகப்பெரிய சவால் தான் என்பதில் சந்தேகம் இல்லை,

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X