மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை என மத்திய அரசு விளக்கம் Dinamalar
பதிவு செய்த நாள் :
மேகதாது, சுப்ரீம் கோர்ட், தமிழகம், கர்நாடகம்

புதுடில்லி: 'கர்நாடகாவில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில், தமிழகத்தை ஆலோசிக்காமல், முடிவு எடுக்கப்படாது' என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. மேலும், இந்த விவகாரத்தில், விவசாயிகள் நலன் காக்கப்படும் என்றும், கர்நாடக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரியுள்ளது.

கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில், காவிரி ஆறு ஓடும் வழியில், மேகதாது என்ற பகுதி உள்ளது. இங்கு, காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட, அம்மாநில அரசு நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. கடந்த, 2013ல், அப்போதைய கர்நாடக முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான சித்தராமையா, 'மேகதாதுவில், 5,912 கோடி ரூபாய் செலவில், 66 டி.எம்.சி., கொள்ளளவு உடைய, புதிய அணை கட்டப்படும்' என, அறிவித்தார். இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து குறைந்து விடும் என்பதால், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடும் எதிர்ப்பு

தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்நிலையில், காவிரி நீர் பாசன கழக நிபுணர் குழு உருவாக்கிய, மேகதாது திட்ட வரைவு அறிக்கைக்கு, கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த வரைவு அறிக்கையை, மத்திய நீர்வள ஆணையத்திடம், 2018 ஜூலை மாதம், கர்நாடக அரசு தாக்கல் செய்து, அணை கட்ட அனுமதி வழங்கும்படி வலியுறுத்தியது. குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவைக்காக, இந்த அணை கட்டப்பட இருப்பதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் வரைவு அறிக்கைக்கு, மத்திய நீர்வள ஆணையம், கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. இது, தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்

கூடாது' என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு அளித்த அனுமதிக்கு தடை விதிக்க கோரியும், கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும், உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கூறப்பட்டுள்ளதாவது: மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி அளித்து உள்ளோம். இது, அணை கட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி கிடையாது. எனவே, இது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது அல்ல. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலும் அல்ல.

வரைவு அறிக்கை தாக்கல் செய்த பின், மத்திய நீர் ஆணையத்தின் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் ஆராய்ந்து பார்த்த பின்பே, அந்த அணை தேவை தானா என்பது குறித்து, ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். பின், அந்த அறிக்கை, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுவுக்கு அனுப்பப்படும்.
இதன் பின் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், திட்டத்தை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பும். ஆகவே, இப்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதி என்பது, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே; அணை கட்டுவதற்கான அனுமதி அல்ல. மேகதாது அணை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்படும். கர்நாடகாவின் கருத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, ஆலோசனை நடத்தப்படாது. விவசாயிகளின் நலனுக்கு எதிராக, எந்த முடிவும் எடுக்கப்படாது. அணை கட்டுவதற்கான அனுமதியே வழங்காத போது, தற்போது தமிழக அரசு தாக்கல் செய்த மனு ஆதாரமற்றது. அவர்கள் கூறும் தகவல்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல. இதனால், தமிழக அரசு தொடர்ந்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (38+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜன-201923:13:31 IST Report Abuse

Pugazh Vடமில்சன் என்பதால் தமிழில் எழுதினேன். The Central govt did not file any petition. It cannot file any partition too, as per the constitutional provisions. The central govt, as per directions of the honourable court, had submitted an explanation only. Since there's no clarity in the clearance given to the State of Karnataka is ambiguous, a detailed explanation was sought after., by the Hon'blue court of Law. In this explanatory report, there is no mention of the power of the State of Tamilnadu. இதைத்தான் சொன்னேன். புரியறதா? என்னை பள்ளி உதவியாளர் என்று சொல்வதில் ஒரு அல்ப சந்தோஷமா? அப்ப, இனிமேல் என்னை "ஒண்ணாம் கிளாஸ் வாத்தி" என்று அன்போடு அழைக்கவும். நன்றி

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
13-ஜன-201921:15:16 IST Report Abuse

தமிழ் மைந்தன் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் உள்ளவிவரம்தானே தினமலரில் வெளியிடப்பட்டுள்ளது. அப்போது உங்களுக்கு கிடைக்காத இல்லாத விவரம் இந்த ஊழல்திமுக அனுதாபி பள்ளிக்கூட உதவியாளருக்கு மட்டும் எப்படி கிடைத்தது........அதுவும் பத்திரிக்கை செய்தி பொய்யாம்.............. ஏம்பா நீங்கள் இன்னும் கருணாநிதி குடுபத்தையே தமிழன்என நம்பிக்கொண்டுள்ள நிலையில் அதுவே உண்மை என பிறரிடம் கூற கூடாது.......இரவு நேர சிரிப்பு......

Rate this:
Nalam Virumbi - Chennai,இந்தியா
13-ஜன-201921:11:53 IST Report Abuse

Nalam Virumbiதமிழக கழகங்களைப் பொறுத்தவரை, தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் கவை இல்லை. வராததையே விரும்புவர். ஏனெனில் மணற்கொள்ளை அடித்து ஊழல் செய்வது எப்படி முடியும்

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X