நிர்மலாவை பாராட்டிய காங்., தலைவர்

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (40)
Advertisement
நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ், ரபேல்

'ரபேல் போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அரசு ஊழல் செய்துள்ளது' என தினமும் குற்றம் சாட்டி வருகிறார், காங்., தலைவர் ராகுல். 'பண பரிமாற்றம் நடந்துள்ளது; ஆனால், என்னிடம் எவ்வித சான்றும் இல்லை' என, அவர் கூறி வருகிறார்.இது தொடர்பாக, சமீபத்தில், பார்லிமன்டில் விவாதம் நடந்தது. அப்போது, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.'காங்., ஆட்சி காலத்திலேயே இந்த போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டது; ஆனால், கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. உங்களுக்கு கமிஷன் கிடைக்காததால், ரபேல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது' என பேசிய நிர்மலா, மோடி அரசின் செயல்பாடுகளை பட்டியலிட்டார்.அத்துடன், காங்., குற்றச்சாட்டுகளுக்கு, விரிவாக, ஆவணங்களுடன் பதில் அளித்தார்; பா.ஜ., கூட்டணி, எம்.பி.,க்கள் மேசைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.நிர்மலாவின் பதிலுக்கு, காங்., - எம்பிக்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். ராகுலோ, எதையும் கண்டு கொள்ளாமல், 'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தாராம். பா.ஜ., - எம்.பி.,க்கள் பலர், நிர்மலாவிடம் சென்று, 'அருமையாக பேசி, காங்கிரசுக்கு பாடம் எடுத்தீர்கள்' என, பாராட்டினராம்.காங்., முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், நிர்மலாவைச் சந்தித்து, 'உங்கள் நாவில் உங்கள் மகள் குடியிருக்கிறாள்' என்றார்.நிர்மலா, புரியாமல் விழித்ததை புரிந்து கொண்ட ஜெய்ராம், 'உங்கள் மகளின் பெயர் வான்மஹி; அதற்கு அர்த்தம், சரஸ்வதி; உங்கள் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள். என்ன அருமையாக, புள்ளி விபரங்களுடன் பேசி அசத்தி விட்டீர்' என்றாராம்.ராகுலுக்கு நெருக்கமானவராக கருதப்படும், ஜெய்ராம் இப்படி வாழ்த்தியது, காங்., உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜன-201908:56:19 IST Report Abuse
Srinivasan Kannaiya பெண் என்றால் பேயும் இறங்கும்
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
15-ஜன-201904:08:15 IST Report Abuse
ராஜேஷ் தற்போதைய காங்கிரஸ் எப்போதும் பொய்யைத்தான் மக்களிடம் பரப்பும் . அப்டித்தான் இல்லாத சவப்பெட்டியை , ஊழல் என்று புரளியை கிளப்பி , வான்பாய் ஆட்சியை களைத்து , அடுத்த பத்து ஆண்டுகள் சுருட்டலுக்கு பஞ்சமே இல்லை
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-ஜன-201913:26:17 IST Report Abuse
Devanatha Jagannathan ஊழல் குற்றசாட்டுகளை குத்துமதிப்பா சொன்னால் இப்படி தான் கும்மாங்குத்து கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X