எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நிறைவேறுமா?
ரஜினி தலைமையில் பா.ஜ., கூட்டணி
நரேந்திர மோடி திட்டம் நிறைவேறுமா?

'தமிழகத்தில், கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன' என, பிரதமர் மோடி அறிவித்ததன் வாயிலாக, லோக்சபா தேர்தலில், நடிகர் ரஜினிக்கு, அவர் அழைப்பு விடுத்துள்ளதாக, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி தலைமையில் பா.ஜ., கூட்டணி : நரேந்திர மோடி திட்டம் நிறைவேறுமா?

கடந்த, 10ம் தேதி, லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, தர்மபுரி மற்றும் கடலுார் மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார்.

வாய்ப்பு :அப்போது, மாநில நிர்வாகி ஒருவர், 'லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், பா.ஜ., யாருடன் கூட்டணி அமைக்கும்; தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் ரஜினியுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு, பிரதமர் மோடி, ''தமிழகத்தில், கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பழைய நண்பர்களையும் வரவேற்க, பா.ஜ., தயாராக உள்ளது,'' என்றார். ரஜினி நடித்த, பேட்ட படம் வெளியான நாளில்,

அப்படத்திற்கு வரவேற்பு எப்படி என, மேலிட தலைவர்கள், தமிழக பா.ஜ., தலைவர்களிடம் விசாரித்துள்ளனர். படம் நன்றாக வந்து உள்ளதையும், அதில், அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருப்பதையும் விவரித்துள்ளனர்.

குறிப்பாக, 'நான் வந்துட்டேன்... கண்டிப்பாக மாற்றிக் காட்டுவேன்... குரல் கொடுத்தால் தான் மாற்றம் நிகழும். நான் நல்லவன்; ஆனா, ரொம்ப நல்லவன் இல்லை... புதுசா வருகிறவனைபழசா இருக்கிறவன் ஆட்டி படைக்க நினைக்கிறான்.


'அங்கே தான் ஆரம்பிக்கிறது அரசியல்... நல்லவனா இரு, ரொம்ப நல்லவனா இருக்காதே...' போன்ற வசனங்களை சுட்டிக்காட்டி உள்ளனர். பேட்ட படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், ரஜினி உற்சாகமாகி உள்ளார். இந்த நேரத்தில் தான், பிரதமர் மோடியின் கலந்துரையாடல் கூட்டத்தில், பா.ஜ., - ரஜினி கூட்டணிக்கு வாய்ப்பு உண்டா என்ற, கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அப்போது, பிரதமர் மோடி, கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தகவலும், ரஜினிக்கு தெரிய வந்ததுள்ளது. அவர், தன் அரசியல் ஆலோசகரிடம் கருத்துகளை கேட்டு வருகிறார்.

இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறியதாவது:அரசியலுக்கு அப்பாற்பட்டு, மோடியும், ரஜினி யும் நெருங்கிய நண்பர்கள். 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியை சந்திக்க, ஜெயலலிதா மறுத்த நேரத்தில், சென்னை, போயஸ் கார்டன் வீட்டில் உள்ள ரஜினி வீட்டுக்கு, மோடி வந்தார். அவருக்கு ரஜினி, தேநீர் விருந்து அளித்தார். சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சி துவக்க, ரஜினி திட்டமிட்டுள்ளார். ஆனால், அவரை, லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சி துவக்கி, அவரது தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என, பா.ஜ., மேலிட தலைவர்கள் விரும்புகின்றனர்.

Advertisement

அதற்கான அழுத்தமும் கொடுத்து வருகின்றனர்.

ஆலோசனை :


ரஜினி தலைமையில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இணைந்து, தேர்தலை சந்திக்கலாம். அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய, இரு பெரிய கட்சிகளுக்கு இணையாக, ரஜினியையும் கருதி தான், கூட்டணிக்கு வரும்படி, மோடி அழைப்பு விடுத்துள்ளார். எனவே, ரஜினி கட்சி துவக்கியதும், 20 தொகுதிகளை, அவர் எடுத்து விட்டு, புதுச்சேரியும் சேர்த்து மீதமுள்ள, 20 தொகுதிகளை, பா.ஜ., ஏழு; பா.ம.க., ஐந்து; தே.மு.தி.க., ஐந்து; த.மா.கா., இரண்டு தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு, ஒரு தொகுதியும் பிரித்து கொடுக்கலாம் என, ரஜினி மன்ற நிர்வாகி ஒருவரிடம், பா.ஜ., தரப்பில் பேசப்பட்டு உள்ளது.எனவே, மோடி அழைப்பு குறித்து, ரஜினி, விரைவில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தன் முடிவை, பொங் கலுக்கு பின் அறிவிப்பார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜன-201906:49:47 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஜன-201912:40:51 IST Report Abuse

A.George AlphonseAll the forgotten,addressless and vanished political parties of our state are trying to sit on the shoulder of Mr.Rajinikanth's uncertain political party is really look like " Mann Kudhirayai Nammbi Aartril Earainguvadu pole " very risk and danger and also like "Aandigal Madamm Kattiya kadai pole" and "Thanakkay Kuzhi Thoondiya Kadhai "pole in tragedy in coming days.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜன-201910:52:08 IST Report Abuse

இந்தியன் kumarதமிழ்நாட்டை பார்த்தால் போதுமானது அல்ல இந்தியாவையும் கவனத்தில் கொண்டு ரஜினி அவர்கள் களம் இறங்கி நரேந்திர மோடிஜிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் , ஊழல் கட்சிகளை அகற்ற இது தான் சரியான வழி

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X