பொது செய்தி

இந்தியா

'ஏர் இந்தியா' வருவாய் 23 சதவீதம் உயர்ந்தது

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'ஏர் இந்தியா',வருவாய், 23, சதவீதம், உயர்ந்தது

புதுடில்லி:நடப்பு, 2018 -- 19ம் நிதியாண்டின், அக்., - டிச., காலாண்டில், 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் பயணியர் பிரிவு வருவாய், 23 சதவீதம் உயர்ந்து, 5,538 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, 2017 -- 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 4,615 கோடி ரூபாயாக இருந்தது.
அதேசமயம், இதே காலத்தில், ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 4 சதவீதம் மட்டுமே அதிகரித்து, 53.28 லட்சத்தில் இருந்து, 55.27 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறியதாவது:மதிப்பீட்டு காலாண்டில், 15 புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை, நிறுவனம் மேற்கொண்டது. வருவாயுடன் ஒப்பிடும் போது, பயணியர் எண்ணிக்கை வளர்ச்சி குறைவாகவுள்ளது. இருந்த போதிலும், பயண துாரம் அடிப்படையிலான காலி இருக்கைகளின் விகிதாசாரத்தை பொறுத்தவரை, பயணியர் எண்ணிக்கை வளர்ச்சி அதிகம் எனலாம்.
தற்போது, 122 விமான போக்குவரத்து சேவைகளை, ஏர் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்
நிறுவனத்தின் வருவாயில், 65 சதவீதம், பன்னாட்டு விமான சேவைகளில் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
13-ஜன-201911:23:20 IST Report Abuse
pattikkaattaan ஏர் இந்தியாவைவிட குறைந்த கட்டணத்தில் விமானத்தை இயக்கும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றனவே எப்படி?..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜன-201908:04:38 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்போ கடனை அடைந்துவிடலாம் என்று சொல்லுங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X