வனத்துறையினரை விரட்டிய கரடி: குட்டி இறந்ததால் ஆக்ரோஷம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்துறையினரை விரட்டிய கரடி: குட்டி இறந்ததால் ஆக்ரோஷம்

Added : ஜன 13, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 வனத்துறையினரை விரட்டிய கரடி: குட்டி இறந்ததால் ஆக்ரோஷம்

குன்னுார்:குன்னுார் காட்டேரி வனப்பகுதியில், கரடி துரத்தியதால், வனத்துறையினர் ஓட்டம் பிடித்தனர்.குன்னுார் அருகே காட்டேரி - சேலாஸ் சாலையோரத்தில் நீர்வீழ்ச்சி அருகே முட்புதர் அதிகளவில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இங்கு கரடிகள் உலா வருவதாக, வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து, டி.எப்.ஓ., சோமன் சுமேஷ் தலைமையில், வனவர்கள் பெரியசாமி, கணேசன் ஆகியோர் மேற்பார்வையில், வனத்துறையினர், அதிவிரைவு மீட்பு குழுவினர், அப்பகுதியில் கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.முதலில் அதிவிரைவு மீட்பு குழுவை சேர்ந்த, 4 பேர் மட்டுமே, தீப்பந்தம் ஏந்தி, துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் சென்றனர். ஆங்காங்கே தீ வைத்து, முட்புதர்களை வெட்டி சென்றனர். அப்போது, திடீரென கரடி துரத்தியதால், ஓட்டம் பிடித்து வனத்தை விட்டு வெளியே வந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.டி.எப்.ஓ., சுமேஷ் சோமன் கூறுகையில், '' அங்கு கரடியின் குட்டி இறந்துள்ளது. தாய் கரடி ஆக்ரோஷத்துடன் விரட்டுகிறது. தானாக அங்கிருந்து செல்லும் வரை கண்காணிப்பு பணிகள் தொடரும். கூண்டு வைக்கப்படமாட்டாது,'' என்றார்.மக்கள் கூறுகையில், 'கூண்டு கொண்டு வரப்பட்டு வைக்காமல் சென்றுள்ளனர். ஆக்ரோஷத்துடன் சப்தம் எழுப்பி உலா வரும் தாய் கரடி மக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X