மற்ற மொழிகள் அவசியம்... சொல்கிறார் திருக்குறள் அன்வர்பாட்ஷா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மற்ற மொழிகள் அவசியம்... சொல்கிறார் திருக்குறள் அன்வர்பாட்ஷா

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மற்ற மொழிகள் அவசியம்...   சொல்கிறார் திருக்குறள் அன்வர்பாட்ஷா

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடையாளம் மட்டுமல்ல; அங்கீகாரத்தையும் கொடுக்க கூடியது மொழி. அதிலும், உணர்வுகளை ஆத்மார்த்தமாக சொல்வது தாய்மொழியில்தான் வெளிப்படுகிறது. உலகம் தோன்றிய காலத்தில் பேசப்பட்ட முதல் மொழி, தமிழ் என்பது பெருமைமிக்கது.உலகின் பொதுமறையாக விளங்குவது திருக்குறள். அதை விட பழமையான இலக்கியம், தொல்காப்பியம். ஐந்தாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தொல்காப்பியத்தில், 'என் மனார் புலவர்', 'என்பர்', 'என்று கூறுவர்' என்ற வார்த்தைகளை பார்க்கும்போது, தமிழ் எத்தனை சிறப்பு வாய்ந்த ஒரு மொழி, என்று மெய்சிலிர்க்கிறார், கோவை, குனியமுத்துாரை சேர்ந்த அன்வர்பாட்ஷா,60.படிக்கும் காலத்திலேயே தமிழ் மீது அதீத பற்று கொண்டவர். குடும்ப சூழலால் படிப்பு பாதியிலேயே தடைபட்டாலும், சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டே, அஞ்சல் வழியில் பட்டம் பெற்றார். தொடர்ந்து, 25 ஆண்டு காலம், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தார்.'திருக்குறள் உறை', 'வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்', 'குறளோடு உரையாடு' உள்ளிட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். திருக்குறள் வேந்தன், குறள்மறைச் செல்வர், தமிழ் நிறைச் செம்மல், திருக்குறள் ரத்னா என தமிழுக்காக இவர் வாங்கிய விருதுகளோ ஏராளம். கடந்த, 2017ல், குவைத் நாட்டில், 'உலக தமிழர்களின் அடையாளம் திருக்குறள்' என்ற தலைப்பில், இவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.தன் வாழ்நாள் அனுபவம் குறித்து, அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டபோது:சிறு வயதிலேயே திருக்குறளை முழுமையாக கற்றுக்கொண்டேன். ஒருநாள், சைக்கிள் கடையில் வேலை பார்க்கும்போது, அங்கிருந்த கரும்பலகையில் ஒரு குறளை எழுதினேன். அப்போது, எந்த சூழ்நிலையிலும் விடாமல் தினமும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் தாக்கம், என் வளர்ப்பு தந்தை இறந்துபோன இரவு அன்று கூட சைக்கிளில் சென்று எழுதி வைக்கும் அளவுக்கு இருந்தது. தினமும் ஒரு குறள் வீதம், 1,330 குறள்களும் எழுத, மூன்றரை ஆண்டுகளாகும். என் வாழ்நாளில், 11 சுற்றுகளாக அதாவது, 44 ஆண்டுகளாக, குறள் எழுதும் பழக்கத்தை ஒருநாளும் விட்டதில்லை.இன்றைய சூழலில் ஆங்கில மோகம் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. பெற்றோர்களும், பிள்ளைகள் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதன் விளைவு, தமிழகத்திலேயே தமிழ் மொழி கற்க டியூஷன் செல்கிறார்கள். இது, எவ்வளவு வேதனையான விஷயம். ஆங்கிலம் தொடர்பு மொழி மட்டுமே; மற்ற மொழிகள் கற்றுக்கொள்வது அவசியம் என்றால், தமிழ் நமது சுவாசமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களும், பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் தமிழ் மொழியை சிறந்த முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.குழந்தைகள் முதல்ஜனாதிபதி வரை!திருக்குறள் மீது அளவற்ற பற்று கொண்ட அன்வர் பாட்ஷா, எப்போதும் தனது பாக்கெட் நிறைய சாக்லெட் வைத்திருப்பார். குழந்தைகள் யாரேனும் ஒரு குறள் சொன்னால், உடனே இனிப்பு கொடுத்து பாராட்டுவது வழக்கம். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், விழா ஒன்றில் இவருக்கு, 'தமிழ் மறை தொண்டர்' என்ற விருது கொடுத்து கவுரவித்தார்.விருது பெறும்போது, 'ஐயா, ஒரு குறள் சொல்லுங்களேன்' என்ற கேட்டதற்கு, 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப...' என்ற குறள் சொன்னதும், சாக்லெட் கொடுத்துள்ளார். அதை, கலாம் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டாராம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X