உயர் மின்னழுத்த ஒயர்களை நிலத்துக்குள் பதிக்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயர் மின்னழுத்த ஒயர்களை நிலத்துக்குள் பதிக்க திட்டம்

Added : ஜன 13, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:உக்கடம் மேம்பால பணியில், மின் ஒயர்களை நிலத்துக்குள் கொண்டு செல்ல ரூ.7.5 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.உக்கடம் - கரும்புக்கடை வரையிலான மேம்பால பணி வேகமாக நடக்கிறது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே, ஆத்துப்பாலம் - சுங்கம் ரோடு சந்திப்பில், உயர் மின்னழுத்த பாதை செல்கிறது. அப்பகுதியில் துாண் கட்ட இடையூறு ஏற்பட்டுள்ளது. சுங்கம் பாதையில், 800 மீட்டர் துாரத்தில், 4 இடங்களில், மின் கோபுரம் உள்ளது.உயர் மின்னழுத்த ஒயரை, நிலத்துக்குள் பதிக்கவும், மேம்பாலப் பணிக்கு இடையூறாக உள்ள, 26 மின் கம்பங்களை இடமாற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரூ.7.5 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, 'டெண்டர்' இறுதி செய்துள்ளது. ஒப்பந்த நிறுவனத்துடன், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளது. இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானதும், போலீசாருடன் ஆலோசித்து, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி, பணிகளை துவக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X