தப்பித்த தமிழக தலைவர்கள்| Dinamalar

தப்பித்த தமிழக தலைவர்கள்

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
  தப்பித்த, தமிழக, தலைவர்கள்

புதுடில்லி: காங்., மற்றும் பா.ஜ., தலைவர்கள் எடுத்த தற்காலிக முடிவால் தமிழக தலைவர்கள் தப்பித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் என்றாலே, கோஷ்டி பூசல், என அர்த்தம். தமிழக, காங்., தலைவரை நியமித்த உடன், 'இவரை மாற்றுங்கள்' என, டில்லிக்கு காவடி எடுப்பது, காங்., தலைவர்கள் வழக்கம்.
தற்போதைய, காங்., தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற பல கோஷ்டியினரும் போராடி வருகின்றனர். 'திருநாவுக்கரசர் விரைவில் மாற்றப்படுவார்' என, ராகுலைச் சந்தித்த கோஷ்டியினர் சந்தோஷத்தில் இருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி. லோக்சபா தேர்தல் முடியும் வரை திருநாவுக்கரசர் மாற்றப்பட மாட்டாராம்.ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது; இந்நிலையில் தலைவரை மாற்றினால், தேர்தலில் பிரச்னை வரும் என்பதால், இப்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என, ராகுல் முடிவெடுத்துள்ளாராம்; தப்பித்தார் திருநாவுக்கரசர்.
பா.ஜ.,விலும் இதே நிலைதான். 'தமிழிசையை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்' என, பா.ஜ., கோஷ்டிகளும், டில்லிக்கு படையெடுத்தன. கட்சி தலைமையும் மாற்ற தயாராக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், 'இப்போதைக்கு மாற்றம் வேண்டாம்; தேர்தலுக்கு பிறகுதான்' என, அமித் ஷா முடிவெடுத்து விட்டாராம்.லோக்சபா தேர்தலால், இரு தலைவர்களும் தப்பித்து விட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
14-ஜன-201915:14:57 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தேசியக் கட்சிகளில் எந்த நடவடிக்கை என்றாலும் டெல்லியில் உள்ளவர்களால் தான் எடுக்கப்படும். இதனால்தான் காமராஜர் ஐயா அவர்களால் தன் எண்ணப்படி இயங்க முடியவில்லை. தமிழக மக்கள் தேசியக் கட்சிகளை ஆதரிக்காததற்கு இதுவும் ஓர் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஜன-201913:21:35 IST Report Abuse
இந்தியன் kumar தேசிய கட்சிகள் தமிழகத்துக்கு நல்லது செய்திருந்தால் தனித்து களம் இறங்கி இருக்கலாம் கர்நாடகாவுக்கு ஆதரவாக இருப்பதால் தான் இங்கு தனித்து இயங்க முடியவில்லை என்பது தான் உண்மை.
Rate this:
Share this comment
மாயவரத்தான் - chennai,இந்தியா
14-ஜன-201914:07:31 IST Report Abuse
மாயவரத்தான் சிரிப்பை அடக்க முடியவில்லை அப்ப திராவிட கட்சிகள் மட்டும் தமிழகத்திற்கு நன்மை செய்து விட்டன என்கிறீர்களா ?? எல்லா அரசு காண்ட்ராக்ட் டிலும் 40 சதவிகித கமிஷன் எல்லா துறைகளிலும் ஊழல். ஊழலை நன்மை லிஸ்டில் சேர்த்து விட்டீர்களா ???...
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
14-ஜன-201916:48:26 IST Report Abuse
Jaya Ramஅப்பா காங்கிரஸில் ஊழலே இல்லை என்கிறீர்களா, நகர்வாலா முதல் வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வரை உண்டுப்பா, நீங்கள் எல்லாம் எழுபது ஆண்டுகள் ஆண்டதால் இந்நாடு பிரிட்டிஷ் அரசினை காட்டிலும் கேவலமாகிவிட்டது...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
15-ஜன-201912:37:37 IST Report Abuse
Rayஒட்டு போட்டால் திட்டங்கள் வருமென்றும் திட்டங்கள் வந்தாலே ஒட்டு போடுவது என்றும் போட்டி போட முடியாது கூடாது அது ஜெயா மற்றும் பிஜேபி கொள்கை தேர்தல் வெற்றி தோல்விகளை அடிப்படையாக கொண்டு சலுகை செய்வதோ கசப்பை உமிழ்வதோ எந்த கட்சிக்கும் உதவாது ஓரளவாவது நடுநிலையுடன் செயல் பட்டால் காலூன்றலாம்...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
13-ஜன-201912:18:22 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அய்யா அமீத்ஷாஞ் சாப் எனக்கு வயது 78 நானும் 1945லேந்து காங்கிரஸ் பாத்துண்டுருக்கேன் நான் என்றுமே காங்கிரஸ் கிடையாது ஜெயபிரகாஷ் நாராயண் பிடிக்கும் அதுபோல காமரேசர்பிடிக்கும் ராஜாஜிபிடிக்கும் அவ்ளோதான் இதுவரை நான் காங்கிரெஸ்க்கு வோட்டுப்போட்டதே இல்லீங்க
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-201914:21:55 IST Report Abuse
தமிழ்வேல் பேஷ் பேஷ், 4 வயசிலேயே அரசியல் இருந்திருக்கு......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X