2030ல் விஸ்வரூபம் எடுக்க போகும் டிஜிட்டல் சக்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2030ல் விஸ்வரூபம் எடுக்க போகும் 'டிஜிட்டல் சக்தி'

Updated : ஜன 13, 2019 | Added : ஜன 13, 2019 | கருத்துகள் (6)
2030ல், விஸ்வரூபம், எடுக்க, போகும், 'டிஜிட்டல் சக்தி'

அதிவேகத்தில் பயணிக்கும் இந்த உலகத்தில், மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. ஆனால், அதை நிறுவனங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளாமல், இருப்பது அறியாமையே. இது, அந்நிறுவனத்தை நஷ்டத்துக்கு கொண்டு சென்று விடும்.

இச்சூழலில், சிறிய, நடுத்தர நிறுவன உரிமையாளர்கள், அடுத்த பத்து ஆண்டுகளை கண்டிப்பாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அதற்கு ஏற்றவாறு, உங்களுடைய தயாரிப்புகளை கொண்டு செல்ல முடியும் என கூறினால் மட்டுமே, அதற்காக பணத்தை செலவழிக்க தயங்க மாட்டார்கள்.ஒரு சிறிய உதாரணம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருவர், 'பிளாஸ்டிக் பை தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தை துவங்க விரும்புகிறேன்', என்றார். 'இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்து வருகிறது.

மேலும், ஒவ்வொரு மாநிலமாக தடை விதித்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில், பிளாஸ்டிக் பை தயாரிக்கும் கம்பெனியில் முதலீடு செய்தால், அது சரியாக இருக்காது' என்று, அவருக்கு அறிவுறுத்தினேன்.அவ்வாறே, பிளாஸ்டிக் தடை, பல மாநிலங்களில் அமலுக்கு வந்து விட்து. இந்திய மக்கள் தொகையில், தற்போது நடுத்தர வகுப்பு என்பது, 50 சதவீதம். இதுவே, 2030ல், 80 சதவீதமாக கூடும் என, கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், உபயோகிப்பாளர் களிடையே 'வாங்கும் சக்தி' கூடும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக, 14 கோடி குடும்பத்தினர் நடுத்தர வர்க்கத்திற்குள்ளும், 2 கோடி பேர், உயர் வருவாய் வர்க்கத்திற்குள்ளும் செல்வர். இதனால், உணவு, பானம், ஆடை, பர்சனல் கேர் தயாரிப்பு, கெசட்ஸ், போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றில், மேலும், 2 முதல் 2.5 மடங்கு அதிகம் செலவழிப்பர்.உடல்நலம், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் வீட்டு பராமரிப்பு ஆகியவைகளில், கூடுதலாக நான்கு மடங்கு அதிகம் செலவழிக்கப்படும்.வாஷிங் மெஷின், பிரிட்ஜ், 'டிவி' மற்றும் வாகனங்கள் ஆகியவற்றுக்கான செலவினம் அதிகரிக்ககூடும்.

மேலும், 'டிஜிட்டல் டிஸ்டிரப்ஷன்' அதிகமாக இருக்கும். மக்களின் வாங்கும் வீதத்தை 'டிஜிட்டல் சக்தி' பெரிய அளவில் மாற்றும். தற்போது, 20 சதவீதமாக இருக்கும் ஆன்லைன் பர்சேஸ், 40 சதவீதமாக மாறும் அல்லதுஇன்னும் அதிகரிக்கலாம்.இந்த கருத்துகளை மனதில் வைத்து, உங்கள் நிறுவனத்தின் உற்பத்தி போக்குகளை மாற்றியமைக்க முயற்சி செய்து, வெற்றி பெறுங்கள்.

சந்தேகங்களுக்கு:இ-மெயில்:sethuraman.sathappan@gmail.com

அலைபேசி எண்: 098204 51259

பர்சனல் லோன் கம்பெனி (பின்சி)பல நடுத்தர குடும்பங்களுக்கு இடையே, அதிகம் உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகளில், 'பர்சனல் லோன்' என்பதும் ஒன்று. அப்படி, பர்சனல் லோன் கொடுக்க, இந்தியாவில் பல கம்பெனிகள் வந்திருந்தாலும், அந்த நிறுவனங்களில் 'பின்சி'(www.finzy.com)ஒரு தனிப்பட்ட நிறுவனமாக இருக்கிறது.இதன் மூலம், அத்தியாவசிய தேவைகளுக்கு, திருப்பி கட்டும் நிலையை வைத்து, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். வீடு சீரமைப்பு, கல்வி கட்டணம், கல்யாண செலவு, வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் வாங்குவது, மருத்துவம், சுற்றுலா செலவு, வாகனங்கள் வாங்குவதற்கும், முதலீடுகள் செய்யவும் வாங்கலாம்.

இது ஒரு, 'பி2பி என்.பி.எப்.சி.,' நிறுவனமாக இருப்பதால், உங்களிடம் உபரியாக பணம் இருக்கும் பட்சத்தில் அதை இந்த நிறுவனத்தில் முதலீடாக செய்யலாம். அப்படி நீங்கள் செய்யும் முதலீடு நேரடியாக கடன் வாங்குபவருக்கு செல்லுகிறது.இதுபோல், பலருக்கு நீங்கள் பணம் கடன் கொடுத்து உதவி செய்யலாம். அவர்கள் திருப்பி கட்டும் பணம் உங்கள் அக்கவுன்ட்டுக்கு நேரடியாக வந்து விடும்.

- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X