நெருங்கினால் நெருக்கடி

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (16)
Advertisement
 நெருங்கினால் ,நெருக்கடி

எந்த ஒரு கட்சியிலும், கட்சி தலைவருக்கு நெருக்கமாக உள்ளோரை பார்த்து, மற்ற கட்சி தலைவர்கள் பொறாமைப்படுவர். 'நெருக்கமாக இருப்பவர்கள், பல விஷயங்களைச் சாதித்துக்கொள்வர்' என, மற்றவர்கள், கடுப்பில் இருப்பர். ஆனால், காங்கிரசில் அந்த பிரச்னை இல்லை.சச்சின் பைலட், ராகுலுக்கு நெருக்கமாக இருந்தார். ராஜஸ்தான், காங்., தலைவராக இருந்த பைலட், நிச்சயம் மாநில முதல்வராக வருவார் என, அனைவரும் நம்பினர்.

சச்சின் பைலட்டும் அப்படித்தான் நம்பினார். கடைசியில் கெலாட் முதல்வரானார்; பைலட் துணை முதல்வரானார்.ஜோதிராதித்ய சிந்தியா, காங்., தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவர். இதனால், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும், என, அவர் ஆவலாக இருந்தார்.ஆனால், கட்சியில் மூத்தவரான, கமல்நாத்திற்கு பதவி கிடைத்தது. 'துணை முதல்வர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள்' என, ராகுல் சொல்ல, சிந்தியா மறுத்து விட்டார்.

தற்போது, மற்றொரு நெருக்கமானவருக்கும் பிரச்னை. காங்கிரசின் தலைமை செய்தி தொடர்பாளராக இருப்பவர் ரன்தீப் சுர்ஜேவாலா. ஹரியானா மாநில, காங்., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.ஹரியானாவில் ஜிந்த் சட்டசபை தொகுதி, எம்.எல்.ஏ., இறந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 'ஜிந்த் தொகுதியில் நீங்கள் தான் போட்டியிட வேண்டும்' என, சுர்ஜேவாலாவிடம், ராகுல் சொல்லி விட்டார்.

'நான் ஏற்கனவே, எம்.எல்.ஏ.,வாக இருக்கும் போது, மீண்டும், எம்.எல்.ஏ.,வாக போட்டியிட வேண்டுமா?' என, ராகுலிடம் கெஞ்சினார், சுர்ஜேவாலா. ஆனால், ராகுல் மறுத்துவிட்டார். இதனால் வெறுப்பில் இருக்கிறார், சுர்ஜேவாலா.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
13-ஜன-201916:46:07 IST Report Abuse
ravichandran எந்த தகுதியும் இல்லாத ஒருவரை தலைவர் தலைவர்னு தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறுங்கிக
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-ஜன-201912:35:07 IST Report Abuse
Darmavan இப்படி நாட்டின் செலவைப்பற்றி கவலைப்படாமல் தன் அரசியல் பேராசைக்காக இதை செய்யும் பப்பு அடிமை ஆட்சி கண்டிக்கத்தக்கது.ஒருத்தனுக்கு இரண்டு MLA பதவி..
Rate this:
Share this comment
Cancel
Raja - ,
13-ஜன-201910:36:03 IST Report Abuse
Raja காலியான தொகுதியில், ஏற்கனவே ச ம உ வாக உள்ள ஒருவர் போட்டியிட்டால் அவருடைய தொகுதிக்கு மறுபடியும் தேர்தல் வருமே. அதுக்கு உர மூட்டை குடவுனிலேயே இருக்கலாமே மண்ட கஷாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X