பொது செய்தி

இந்தியா

வெளிநாடு இந்தியருக்கு ரயிலில் சைவ உணவு

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (24)
Advertisement
வெளிநாடு, இந்தியர், ரயில், சைவ, உணவு

புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்று, டில்லி திரும்பும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, சிறப்பு ரயில்களில், வட மாநில சைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில், இம்மாதம், 15 முதல், மார்ச், 4 வரை, பிரசித்திபெற்ற கும்பமேளா நடக்கிறது. இதில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்கின்றனர்.கும்பமேளாவில் பங்கேற்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், இம்மாதம், 21 - 23ம் தேதிகளில், பிரயாக்ராஜில் நடக்கின்றன.

இதைத் தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள், சிறப்பு ரயில் மூலம், 24ல், டில்லி செல்ல உள்ளனர். அப்போது, அவர்களுக்கு, ரயில்களில் வட மாநில சைவ உணவு வழங்க, ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வெளியுறவு விவகாரத்துறை, உ.பி., மாநில அரசு, ரயில்வே ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்ற உயர் நிலை குழு கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
14-ஜன-201919:55:07 IST Report Abuse
ரத்தினம் சைவ உணவு பழக்கம் தமிழ் மண்ணுக்கு புதியதன்று.. பிரியாணி தான் முஸ்லிம்களால் இறக்குமதி செய்யப்பட்டது. போலி டுமிழன்கள் வள்ளுவ பெருந்தகை யின் கொல்லாமை, புலான் மறுத்தல் அதிகாரத்தை படித்து தெளியவும் .
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
14-ஜன-201913:56:36 IST Report Abuse
Viswam வெளிஊர்ல இருக்கிற நம்ம ஆளுங்க தானே வர்ராங்க? வெள்ளைக்காரனுங்க இல்லியே? சைவம் பிடிச்சிருந்தா ட்ரைனுல காசு கொடுத்து வாங்கி சாப்பட போறாங்க. பிடிக்கலையா, இறங்கின அப்பறம் எதாவது சாப்டுட்டு போறாங்க. சாப்பாடு கேவலமா இருக்குன்னு மீடியாவுல கருத்து போட்டா ரயில்வேக்காரங்க கேட்டரிங் கான்ட்ராக்டரை மாத்தப்போறாங்க. எதுக்கு சைவம் Vs அசைவம் அடிதடி? பேப்பர்ல வர எல்லாத்தையும் லென்ஸ் வச்சி பார்க்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
14-ஜன-201912:16:08 IST Report Abuse
Mohamed Ilyas தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிரியாணிக்கு புகழ் பெற்ற அஞ்சப்பர், புஹாரி, ஜூனியர் குப்பண்ணா, அசீப் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் பெருமளவு கிளைகள் பரப்பி வளர்ந்து வருகின்றன. சென்னையை தவிர மற்ற பல நகரங்களிலும் பிரியாணி விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பிரியாணி விற்பனையில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் மேல் வர்த்தகம் செய்கின்றன. இவை மட்டுமின்றி அமைப்பு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், அந்தபகுதிகளில் மட்டும் உள்ள உள்ளூர் கடைகள் மூலம் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிரியாணி விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rate this:
Share this comment
14-ஜன-201914:53:04 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அசைவ உணவை அடிக்கடி உண்பதால் தான் உடல் எடை அதிகரித்து இன்றைய கால நகர மக்கள் அவதி படுகிறார்கள். இந்துக்களில் அசைவத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. பண்டிகை காலங்களில், சுப நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக அசைவம் இல்லை. வார நாட்களில் குறிப்பிட்ட நாட்களில் அசைவம் சாப்பிடமாட்டார்கள். சாப்பிடும் நாட்களிலும் காலையில் சாப்பிட வாய்ப்பில்லை, மதியம் ஒரு வேலை மட்டும் சாப்பிடுவார்கள், இரவில் கண்டிப்பாக சாப்பிட கூடாது. இந்த பழக்கமெல்லாம் இன்று உடல் கெட்டு மருத்துவமனை சென்றால் டயட்டீசியன் சொல்லிக்கொடுப்பார் , கட்டணம் வாங்கிக்கொண்டு....
Rate this:
Share this comment
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
14-ஜன-201917:12:51 IST Report Abuse
Mohamed Ilyasஉலகிலேயே சக்கரை வியாதி அதிகம் உள்ள நாடு இந்தியா தான் , ஹெல்த் இன்டெஸ் இல் இந்தியாவின் இடம் 32 தினமும் அசைவும் சாப்பிடும் கத்தார் உடபட பல மேற்கெதிய நாடுகள் நம்மை விட மேலாக உள்ளனர் சவைம் சாப்பிட்டா நோயே வாராது என்பது எல்லாம் சுத்த ஹம்பக்...
Rate this:
Share this comment
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜன-201916:30:56 IST Report Abuse
Endrum Indianஅறிவற்றுத்தான் நான் இருப்பேன் அசைவ உணவு தான் உணவு உண்பேன் என்று வீண் பிடிவாதம் பிடிப்பவர்களை எந்த கொம்பனாலும் மாற்றவே முடியாது. ஜீரண நேரத்தை பாருங்கள். பழங்கள் 1 1/2 மணி சைவ உணவுகள் 6 மணி நேரம். பன்னீர்/வெண்ணை - 12 மணிநேரம் மீன்-24 மணிநேரம். ஆடு, பன்றி மாமிசம் -48 மணிநேரம் மாட்டிறைச்சி - 72 மணிநேரம். அதற்குத்தான் சொல்வது மாமிசம் சாப்பிட சாப்பிட மனதில் ஒரு கொலை வெறி தான் மனதில் நிழலாக இருக்கும் என்று. நீங்கள் ஆட்டை வெட்டி அதன் ரத்தம் கோப்பையில் வடித்து எடுக்க, அது துடிக்க துடிக்க இருக்கும் காட்சியை மட்டன் ஸ்டாலில் சென்று பாருங்கள் (இப்போ சூப்பர்மார்கெட்டில் காய்கறி போல மாமிசம் கிடைக்கின்றது) அப்போது தான் நீங்கள் மனிதனாக இருக்கும் பட்சத்தில் ஒரு தடவைக்கு இரு தடவை யோசிப்பீர்கள் நான் ஏன் இன்னொன்றை கொன்று நான் வாழ வேண்டும் என்று. உடனே காய்கறி மட்டும் என்னவாம் என்று முட்டாள்தனமான வாதம் வைக்காதீர்கள். ஆண்டவன் சிங்கம் மானை அடித்து ரத்தத்தோடு சாப்பிட, நரியை, பறவைகளை அதன் மீதியை சாப்பிட, ஆடு, மாடு , மனிதனை காய்கறி உணவை சாப்பிட பல், இரைப்பை எல்லாவற்றையும் படைத்திருக்கின்றான். எங்காவது ஆடு மாமிசம் சாப்பிட்டிருக்கின்றதா சொல்லுங்கள்????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X