மகத்தான வெற்றி!

Added : ஜன 14, 2019
Share
Advertisement

நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு இருந்த முறையில் இருந்து புதிய திருப்பமாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு தரும் புதிய சட்டம் அமலாகி உள்ளது.

வேறுவிதமாக பார்த்தால், ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, முற்றிலும் வேறு கோணத்தில், பொருளாதார அடிப்படையில், இதனால் அமலாகிறது.அரசமைப்பு சட்ட விதிகளின், 124வது திருத்த மாக அமையும் இந்த இடஒதுக்கீடு, வருமான அளவு, நில உரிமை, சொந்த வீட்டின் அளவீடு என, பல கோணங்களில், ஒருவரது வசதி வாய்ப்புகளை எடை போட உதவும்.

அரசமைப்பு சட்டவிதி, 15 மற்றும் 16ல் உள்ள சாராம்சங்களில், சிறிய மாற்றம் கொண்டு வந்து, அதனால் ஒட்டுமொத்தமாக, மேற்பட்ட குடியினருக்கு அரசு வேலை மற்றும் கல்வி வசதிகள் ஆகியவற்றில், ஒதுக்கீடு கிடைக்க உதவும்.இதுவரை, 'ஷெட்யூல்டு' வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர் என, மொத்த இட ஒதுக்கீட்டில், 49.5 சதவீதம் வழங்கப்பட்டது. ஷெட்யூல்டு வகுப்பினருக்கு, 15 சதவீதம், சீர்மரபினருக்கு, 7.5 சதவீதம், மிகவும் பிற்பட்டோருக்கு , 27 சதவீதம் என, 49.5 சதவீதம் என்பது நடைமுறையில் உள்ளது.

தமிழகம் போன்ற சில மாநிலங்களில், இது கூடுதலாக இருக்கிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே, 50 சதவீதத்திற்கு மேல் ஒதுக்கீடு கூடாது என்றாலும், அரசமைப்பு சட்டவிதிகள் திருத்தத்தில், புதிய திட்டம் அமலாவது வரலாற்று நிகழ்வு.முதலாவதாக, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து, சட்டமேதை அம்பேத்கர் காட்டிய வழி, நம் நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை மாற்றிய செயல்.

இந்நாட்டில், ஜாதி, பேதமற்ற சமுதாயம் என்பது, கலாசாரத்தின் வழிவந்தது. முதன் முதலில், பார்சிக்கள் வந்த போது, அப்போது ஆண்ட மன்னரிடம், தாங்கள் இந்த சமுதாயத்துடன் இணைந்து இருப்போம் என்பதை உணர்த்த, பால் கொண்டு வரச் சொல்லி, அதில் சர்க்கரையைப் போட்டு, இரண்டும் இணைந்து ஒன்றாவதைச் சுட்டிக்காட்டியது வரலாறு.

இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்பவர்கள், அடிப்படையில் நம்மவர்கள் என்பதை, வரலாறு அறிந்தவர்கள் அதிகம் அறிவர். ஆகவே, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை என்ற வார்த்தைகள், ஓட்டு வங்கிக்காக அரசியல் கட்சிகள், அதிலும் அதிக குடும்பத் தலைவர்கள் உள்ள கட்சிகள் பேசப்படும் விஷயமாகும்.தவிரவும், படித்தவர்களிடம் கலப்பு திருமணம் அதிகரிக்கிறது. அதிலும், கிறிஸ்தவர்கள், இந்துக்களின் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன.

அங்கு ஒன்றும் ஜாதியை காணோம்.மேலும், இந்த ஒதுக்கீட்டில், இஸ்லாமியர், கிறிஸ்தவர், பார்சியர் என்ற இனப் பாகுபாடு கிடையாது. ஆகவே, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில், பிற்பட்டோர் என்ற கருத்தில் ஏற்படுத்தப்பட்ட செயலும், அதற்கு பார்லிமென்டின் இரு சபைகளும் ஆதரவு தந்ததும், இதன் முக்கியத்துவத்தைக் காட்டுவன. இதை இனி ஆறு மாநிலங்கள் ஏற்றதும், நாட்டின் சட்டமாகும்.

நேரு காலத்தில் இருந்து, இந்த இட ஒதுக்கீடு பேசப்பட்டது. மாயாவதி கட்சி இதை ஆதரித்தது என்றால், ஏன் அதற்கு சட்ட அடிப்படையில் முழுவடிவம் தரவில்லை என்பது கேள்வியாகிறது. மேலும், நாட்டில் உள்ள, 50 சதவீதம் மக்கள், இந்த இட ஒதுக்கீட்டிற்கு தயாரானவர்கள் என்கின்றனர். அதிலும், ஒரு கேள்வி எழுகிறது.நாட்டில் இதுவரை ஏன், எந்த பொருளாதார அடிப்படையிலான புள்ளிவிபரத் தொகுப்பும் முறைப்படுத்தப்படவில்லை. சாதாரணமாக, ஆதார் அமலாக்கம் வந்தபின், அர்த்தமற்ற இலவசம் குறைந்து அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

கல்வியின் தரத்தை மேம்படுத்தவதற்கான செயல்கள், சில அறிகுறிகளுடன், நாடு முழுவதும் தெரிகிறது. திறனறி கல்வி, ஆய்வு அடிப்படையில் கல்வி, இனி வேலைவாய்ப்பு தரும் சாதனமாக மாறும்.அதேபோல், அரசு வேலைவாய்ப்புகள் என்பதில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்றபோது, பல்வேறு மாநிலங்களில், புதிதாக பல இளைஞர்கள் களத்தில் வரும்போது, அரசுப் பணிகளின் தகுதி அதிகமாகலாம். அதையும் நிர்வகித்து முறைப்படுத்துவது பற்றி, இப்போது எதற்கு கேள்வி?ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு, 'மெஜாரிட்டி' இல்லை என்பதால், பல மசோதாக்களில் விவாதம் கிடையாது.

சபை முடங்கி விடும் காலத்தில், இந்தச் சட்ட அமலாக்கத்தில், இரவு, 10:௦௦ மணிக்கு மேல் விவாதம் நடந்து, அதிக ஆதரவு ஓட்டுகள் பெற்றது என்பது சாதனை.இனி, இச்சட்ட அமலாக்கத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வரும்போது, அது இத்திட்டத்தை முறியடிக்கும் என்ற காங்கிரஸ் கருத்து, அக்கட்சித் தலைவர்கள், தாங்கள் ஆற்ற முடியாத செயலை, சாதாரண மனிதர் தலைமையிலான, பா.ஜ., செய்திருப்பதைக் கண்டு ஆதங்கப்படும் வார்த்தைகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X