பாகிஸ்தானுக்கு எதிராக தீர்மானம் அமெரிக்க பார்லி.,யில் தாக்கல்

Added : ஜன 14, 2019
Advertisement

வாஷிங்டன்:பயங்கரவாதத்தை தடுக்காததால், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, 'மிக முக்கியமான நட்பு நாடு' என்ற அந்தஸ்தை நீக்க வலியுறுத்தி, அமெரிக்க பார்லிமென்டில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.

'நாட்டோ' எனப்படும், வடக்கு அட்லாண்டிக் நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளில், பாகிஸ்தானுக்கு, மிகவும் முக்கியமான நட்பு நாடு என்ற அந்தஸ்தை, அமெரிக்கா வழங்கியிருந்தது. இதன்படி, ராணுவ ஒப்பந்தங்கள், உறவுகளில் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா உடனடியாக உதவும்.

இந்நிலையில், குடியரசுகட்சியைச் சேர்ந்த எம்.பி.,யான ஆண்டி பிரிக்ஸ், அமெரிக்க பார்லி.,யில், ஒரு தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தானுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுஉள்ளது. ஆனாலும், பயங்கரவாதத்துக்கு எதிராக, அந்த நாடு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஹக்கானி போன்ற பயங்கரவாத அமைப்புகள், தங்கள் எல்லைப் பகுதியை பயன்படுத்த, பாகிஸ்தான் வாய்ப்பு அளித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததுடன், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது.அதனால், பாகிஸ்தானுக்கு அளித்துள்ள சிறப்பு அந்தஸ்தை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்காலத்தில், இந்த அந்தஸ்தில் மாற்றம் செய்ய வேண்டுமானால், பார்லி.,யின் அனுமதியை, அதிபர் பெற வேண்டும்.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ உதவிகள் உள்ளிட்டவற்றை, அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த தீர்மானம், பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X