துபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல்

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
 துபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல்

துபாய்:துாபாயில் இந்தியர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், 14 வயது சிறுமியின் கேள்விகளால் திணறினார்.

இரண்டு நாள் பயணமாக ராகுல் துபாய் சென்றார். நேற்று மாலை இந்தியர்கள் பங்கேற்ற மாநாட்டில் பேசினார்.''இந்தியா சிறப்பான எதிர்காலத்தை பெறவில்லை. பா.ஜ., அரசால் மதவாதம் அதிகரித்துள்ளது,'' என ராகுல் பேசினார்.அப்போது பார்வையாளர்களிடம், ''என்னிடம் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா,'' என கேட்டார். இதில் ஏராளமானோர் கை துாக்கினர். அப்போது ஆவலாக இருந்த சிறுமியிடம் மைக்கை கொடுக்குமாறு ராகுல் கூறினார்.சிறுமி எழுப்பிய கேள்விகளால் ராகுல் திணறிப்போனார்.

சிறுமியின் கேள்விகள்

இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது திருநீறு அணிந்து கோயிலுக்கு சென்றீர்கள், காஷ்மீருக்கு சென்ற போது குல்லா அணிந்தீர்கள். இது ஏன்?

அதற்கு ராகுல், ''அனைத்து மதத்தினரும் சமம் என்பதை உணர்த்தவே எல்லா வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறேன். சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்,'' என்றார்.

இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?

இதைக்கேட்டவுடன் ராகுலின் முகம் மாறியது. சிரித்த முகமாகவே இருந்தார்.மேலும் அந்த சிறுமி, 'மோடி ஆட்சிக்கு வந்த பின்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனியாவது நீங்கள் 'மதவாதம்' என பிரசாரம் செய்யாமல் 'ஊழல் இல்லாத இந்தியா' என ஓட்டு கேளுங்கள். இந்திய மக்கள் சிந்திப்பர்' என்றார்.

சிறுமியின் பேச்சை பார்வையாளர்கள் பாராட்டினர்.இதற்கிடையே சிறுமியின் துடுக்கான கேள்விகளை தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கான நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbiah.N - Karaikudi.,இந்தியா
20-ஜன-201919:54:20 IST Report Abuse
Subbiah.N என்ன கை வலிக்குதா நெருப்பு இல்லாமல் புகையாது தம்பி
Rate this:
Cancel
metturaan - TEMA ,கானா
16-ஜன-201917:16:31 IST Report Abuse
metturaan இந்த செய்தி பொய் என்றால் அணைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு இதை வெளியிட்டு இருக்கின்றனவே??...எனில் பொய்யான கருத்து பரவலுக்கே ஊடகங்கள் முதலிடம் தருகின்றனவா ???
Rate this:
Cancel
Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா
16-ஜன-201909:53:16 IST Report Abuse
Ubaidullah Razzaq இது ஒரு பொய்யான தகவல் சிறுமி எதுவும் பேசவில்லை ராகுலும் பேசவில்லை யாரோ ஒருவன் போட்ட செய்தி
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
17-ஜன-201907:36:09 IST Report Abuse
Darmavan.மெய்யை பொய்யாக/பொய்யை மெய் என்று எதையும் திரித்து பேசுவார்கள்.இந்த சேதியை பொய் என்பதில் ஆச்சர்யமில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X