சவுதியில் தப்பிய பெண் கனடாவில் தஞ்சம்

Added : ஜன 14, 2019
Advertisement

டொரோண்டோ:தனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முயற்சித்ததால், சவுதி அரேபியாவிலிருந்து தப்பிய ரகப்அல்-கனான் 18, என்ற பெண்ணுக்கு கனடாவில் தஞ்சம் கிடைத்தது. அவர் கனடாவின் டொரண்டோ நகருக்கு வந்தார்.

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ரகப்அல்-கனான், தனக்குவிருப்பமில்லாமல் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள்முயற்சித்ததைதொடர்ந்து, அங்கிருந்து தப்பி தாய்லாந்து வந்தார். ஆஸ்டர்லிங் செல்ல முயற்சித்த அவரை, தாய்லாந்துஅதிகாரிகள் திருப்பி சவுதிக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். தனது நிலையை, சமூக வலைதளங்களில் கூறி உதவிகேட்டார் அல்-கனான்.

மீண்டும் சவுதிக்கு சென்றால், தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறிய அவருக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. ஆஸ்திரேலியா, கனடாவில் நாடுகளில் அல்-கனான் தஞ்சம் கோரினார். ஐ.நா.,-வால் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட அவருக்கு, கனடாவில் தஞ்சம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தாய்லாந்தில் இருந்து அவரை கனடாவின் டொரோண்டோ நகருக்கு வந்தார். கனடா என்ற 'டி ஷர்ட்' அணிந்து விமான நிலையத்தில் தரையிறங்கிய போது கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா பிரீலேன்ட் அவரை சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம், அல்-கனானை புதிய கனடா பெண் என அறிமுகம் செய்து வைத்தார். "ஒருவரை, ஒரு பெண்ணை நம்மால் காப்பாற்ற முடிந்தால், அது நல்ல விஷயம் தான்" என்று பிரீலேன்ட் கூறினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X