அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : ஜன 14, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நிழற்கூடம் சேதம்; பராமரிக்கப்படுமா? கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில், கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. பராமரிப்பின்றி சேதமடைந்ததால், நிழற்கூடத்தைச் சுற்றிலும் குப்பைக் கொட்டி வைக்கின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. பயணியர் அமரும் இருக்கைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளதால், நீண்ட நேரம் மக்கள் கால்கடுக்க காத்திருக்கின்றனர். எனவே, நிழற்கூடத்தை பராமரித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும்.
குவிந்துள்ள குப்பை அகற்ற கோரிக்கை: ஓசூர் பஸ்தி வழியாக, ஆவலப்பள்ளி செல்லும் சாலையோரம், பாரதி நகரில் குப்பை கொட்டப்படுகிறது. இதில், பெரும்பாலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தான் அதிகமாக உள்ளது. கால்நடைகள் குப்பையை கிளறி செல்வதால், துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பையை அள்ளினால் கூட, மீண்டும் அதே இடத்தில் கொட்டப்படுகிறது. பலத்த காற்று வீசினால், சாலைக்கு குப்பை வந்து விடுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பையை அள்ளுவதுடன், தொட்டி வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X