நன்னீர் மீன் வளர்க்க விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நன்னீர் மீன் வளர்க்க விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜன 14, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: மானியத்துடன், நன்னீர் மீன் வளர்க்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் தில்லைராஜன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை, நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, புதிய மீன் பண்ணை குளங்கள், குட்டைகள் ஒரு ?ஹக்டேரில் அமைக்க ஆகும் செலவினத் தொகையான, ஏழு லட்ச ரூபாயில், 40 சதவீதமான, 2 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இதேபோல், ஏற்கனவே உள்ள மீன் வளர்ப்பு குளங்களை புதுப்பிக்க வழங்கப்படும், 3 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயில், 40 சதவீதமான, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இதேபோல், நன்னீர் மீன் வளர்ப்புக்கு, இடுபொருட்கள் செலவினத்திலும், 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். திட்டங்களில் சேர விரும்புவோர், 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மீன் பண்ணைகள் அமைக்க சொந்த நிலம் அல்லது, 10 ஆண்டு குத்தகை பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04343-235745 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X