பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தையை மீட்டு தரக்கோரி தாய் தர்ணா

Added : ஜன 14, 2019
Advertisement

அரக்கோணம்: மாமியார் வசம் உள்ள குழந்தையை மீட்டுத்தரக்கோரி, போலீஸ் ஸ்டேஷன் முன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, நாகவேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், வாணியம்பேட்டையை சேர்ந்த வனிதா, 24, என்பவருக்கும், கடந்த, மூன்று ஆண்டுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு வயதில், ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம், மணிகண்டன் உடல் நலக்குறைவால் இறந்தார். வனிதாவை, அவரது மாமியார் சாவித்ரி உள்ளிட்ட உறவினர்கள் சேர்ந்து, குழந்தையை பறித்து கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில், வனிதா புகாரளித்தார். 'குழந்தையை மீட்டுத்தரும் வரை, இங்கிருந்து செல்லமாட்டேன்' எனக்கூறி, போலீஸ் ஸ்டேஷன் முன் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, சாவித்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், குழந்தையை மீட்டு, வனிதாவிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X