பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளிக்கடையில் 450 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Added : ஜன 14, 2019
Advertisement

திருவண்ணாமலை: ஜவுளிக்கடையில் பயன்படுத்த வைத்திருந்த, 450 கிலோ பிளாஸ்டிக் பைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் தேரடி தெரு மற்றும் பல இடங்களில் துணிக்கடை நடத்தி வரும் பொன்ராஜன் சில்க்ஸ் துணிக்கடையில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக, நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள், அங்கு சோதனை நடத்தி, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 450 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். 'பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X