'நன்னடத்தை சான்றிதழை இணையத்தில் பெறலாம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நன்னடத்தை சான்றிதழை இணையத்தில் பெறலாம்'

Added : ஜன 14, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: இணையதளம் மூலம், நன்னடத்தை சான்று பெறும் சேவையை, போலீஸ் எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி துவக்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர், காவல்துறையில் நன்னடத்தை சான்று பெறுவது வழக்கம். இதற்காக, பயனாளிகள் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று, விண்ணப்பம் அளிப்பர். பின்னர், எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து, நன்னடத்தை சான்று வழங்கப்படும். இந்த நடைமுறை முடிந்து, சான்று கிடைக்க, குறைந்தபட்சம், 15 நாட்களாகும். இதை, எளிதாக பெற இணையதளம் மூலம், நன்னடத்தை சான்று பெறும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை, திருவண்ணாமலையில், எஸ்.பி., சிபிசக்கரவத்தி துவக்கி வைத்தார். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், நன்னடத்தை சான்று சரிபார்ப்பு, வாடகைதாரர், வீட்டுவேலை ஆட்கள், தனிநபரின் விபரம் சரிபார்ப்பு, போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X