பொது செய்தி

தமிழ்நாடு

குறுகிய இடத்தில் கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்: இடநெருக்கடியால் போலீசார் அவதி

Added : ஜன 14, 2019
Advertisement

கரூர்: கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், குறுகிய இடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், பெண் போலீசார், புகார்தாரர்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகராட்சி அலுவலகம் அருகில், டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை செயல்படுகின்றன. இதில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன், பழைய கட்டடத்தில் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. அதில், இன்ஸ்பெக்டர் உள்பட, 12க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆனால், போதிய இடவசதி இல்லாமல், பெண் போலீசார் சிரமப்படுகின்றனர். மேலும், போலீஸ் ஸ்டேஷனை சுற்றி போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில், கட்டடத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கி விடுகிறது. அப்போது கொசு உற்பத்தி அதிகரித்து விடுகிறது. மேலும், இக்கட்டத்தின் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பூங்கா, பராமரிப்பு பணிக்காக பல மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து விஷப் பூச்சிகள் ஸ்டேஷனுக்குள் படையெடுக்கின்றன. இதனால், இரவு நேர பணிக்கு வரும் பெண் போலீசார், அருகில் உள்ள சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைகின்றனர். கரூர் டவுன், வெங்கமேடு, வெள்ளியணை, பசுபதிபாளையம், வாங்கல் மற்றும் அரவக்குறிச்சி சப் -டிவிசன் உள்ளிட்ட போலீஸ் சரக பகுதிகளில், பெண்கள் மூலம் வரும் புகார்கள் இங்கு விசாரிக்கப்படுகிறது. தினமும் ஏராளமான புகார்தாரர்கள் மகளிர் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். எனவே, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனை, புதிய கட்டடம் அல்லது அதிக இடவசதி கொண்ட இடத்துக்கு மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X