பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 14, 2019
Advertisement

சாலையோரம் குப்பை குவிப்பு: கரூர் அருகே, வெண்ணைமலையில் முருகன் கோவில் உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில், போதுமான குப்பைத் தொட்டி வைக்கப்படவில்லை. பொதுமக்கள் குப்பையை சாலையில் வீசி செல்கின்றனர். அதிகம் குப்பை சேர்வதால், துர்நாற்றம் சுகாதார கேடு ஏற்படுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, குப்பையை கொட்டும் வகையில், சேகரிக்கும் தொட்டிகளை வைக்க வேண்டும்.
குழாய் உடைப்பு; வீணாகும் குடிநீர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகே, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழாய் உடைந்து, பல நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. நகராட்சி பணியாளர்கள் இன்னும் அதை சரிசெய்யவில்லை. இதனால், குழாய் வழியாக தண்ணீர் திறக்கும் போது, தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. தரமற்ற குழாய் பதிக்கப்பட்டுள்ளதால், அதிக அழுத்தம் தாங்காமல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

சேதமான சாலையை சீரமைக்கணும்: கரூர் அருகே செட்டிபாளையம் சாலையில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன. இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து பல மாதங்களாகிறது. குண்டும், குழியுமாக உள்ள சாலையில், மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி, சுகாதார கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்.

குழாய் சேதம்; நீரின்றி தவிப்பு: கரூர் என்.எல்.ஜி.,தெருவில் ஆழ்துளை குழாய் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. அந்த தொட்டிக்கு மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதிலிருந்து, மக்கள் தங்கள் அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீரை பிடித்து வந்தனர். இந்நிலையில், குடிநீர் தொட்டியில், குழாய் உடைந்ததால், தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. அன்றாட தேவைக்கு தன்ணீர் பிடிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலன் இல்லை.

சாக்கடையோரம் முட்செடிகள்: கரூர் அருகே ஆத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், கழிவுநீர் செல்ல வசதியாக, சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இக் கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாயில் ஏராளமான முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும், கால்வாய் முழுவதும் மண் அடைப்பு உள்ளதால், மழை பெய்யும் போது, தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கிவிடுகிறது. அதில் கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாக்கடை கால்வாயை, சுத்தப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X