பொது செய்தி

இந்தியா

குஜராத்தில் இன்று முதல் புதிய இடஒதுக்கீட்டு சட்டம் அமல்

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (22)
Advertisement
குஜராத், இடஒதுக்கீட்டு சட்டம்

ஆமதாபாத் : பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் குஜராத்தில் இன்று (ஜன.,14) முதல் அமலுக்கு வருகிறது.

அனைவருக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பொதுப்பிரிவில் பொருதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடம்ஒதுக்கீடு வழங்கப்படுவதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இது தொடர்பான சட்டதிருத்த மசோதா பார்லி., இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல்சாசன சட்டத் திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத்தில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் குஜராத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் சதவீதம் 59. 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் முன்பு அளித்த தீர்ப்பால் குஜராத்தில் இதுவரை 49.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
14-ஜன-201920:32:30 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லது உடன் அமூல் படுத்தியதற்கு. நீண்ட நாள் கனவு பலித்துவிட்டது. ஜாதி அடிப்படையை விட்டு இப்படி எல்லாமே பொருளாதார அடிப்படையில் அதிலும் திறமையின் தகுதிப்படி அரசுப்பணியாளர்களை நியமித்தால் ஊழலற்ற நிர்வாகம் அமையலாம். அறிவு அதிக முள்ளவர் தன்பணியை செம்மையாக செய்து பெயரெடுக்க ஆசை படுவர். குறைந்த மதிபெண் பெற்று ஜாதி இட ஒதுக்கீட்டில் வந்தவர் தன் திறமை பற்றி கவலை படாமல் தனக்கே எல்லாம் என சுய தேவைக்காக போராட தயக்கமின்றி பிறரையும் அச்சுறுத்தி போராட படை சேர்ப்பதையே முக்கிய பணியாக கொள்வர்.அதனால் திறமை மிக்கவன் பணிக்காக ஏங்கி பட்டினி கிடக்க நேருகிறது. ஜாதி இட ஒதுக்கீட்டுக்கு முற்று புள்ளி வைத்தல் வேண்டும். எல்லஜாதி மக்கள் தொகை கணகெடுத்து விகிதாசாரப்படி அரசு பணி வழங்கினால் மிக ஏற்புடையது. நல்ல பழக்கவழங்களை உடையவன் எப்போதும் வன்முறைக்கு உடந்தை ஆகான். தானுண்டு தன் பணிஉண்டு என தன் கடமையை நினைத்து அரசுக்கு ஊழியம் செய்வான்.எதிர்க்க மாட்டான். அறிவாற்றலால் அரசை அணுகி பெற முயல்வான்.ஒருபோதும் வன்முறையில் ஈடுபட்டு அரசை எதிர்க்கமாட்டான். தன் திறமையை பணியில் காட்டி பெறவே விரும்புவான் .
Rate this:
Share this comment
14-ஜன-201921:10:40 IST Report Abuse
பாரதிராஜாஇது எங்கள் ஜாதி முன்னேற்ற கட்சிகளுக்கு எதிரானது. இதை எதிர்ப்பது எங்கள் கடமை....
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
14-ஜன-201919:32:51 IST Report Abuse
Mohan Sundarrajarao காசேதான் கடவுளடா. எனவே, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை.
Rate this:
Share this comment
Cancel
gopal - Chennai,இந்தியா
14-ஜன-201918:31:05 IST Report Abuse
gopal @makkal neethi : reservation மூலம் பல தலை முறை பயன் அடைந்து உள்ளனர் ஆனால் அவர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள ஏழைக்கு அவர்களின் சீட்டை விட்டு கொடுக்க தயாராக இல்லை ஆனால் வாய் கிழிய சமூக நீதி பேசுவார்கள் .. இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு உண்மையில் ஏழைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் B B.C , O .C இல் ஏழை மக்களே இல்லையா என்ன ? அம்பேத்கர் அன்றே கூறியது ஒரு ஒரு 10 வருடம் ஒரு முறை Reservation இல் இருந்து முன்னேறிய சமூகத்தின் பெயர்களை நீக்கி இருக்க வேண்டும் ஆனால் ஓட்டிற்காக இந்த அரசியல் வாதிகள் செய்யமால் இருக்கின்றனர் ... உண்மையில் பொருளாதாரத்தின் அடிப்படையில் தான் reservation இருக்க வேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X