முன்விரோதத்தால் மோதல்: தகராறில் மூதாட்டி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோதத்தால் மோதல்: தகராறில் மூதாட்டி பலி

Added : ஜன 14, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வெள்ளியணை அருகே நடந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். கரூர் அருகே, வெள்ளியணை கன்னிமார்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூனன், 78; விவசாயி. இவர் மனைவி மல்லிகா, 68. அதே பகுதியை சேர்ந்தவர் அன்பரசன், 50; விவசாயி. இவர் மனைவி சித்ரா, 40. இரு குடும்பத்தினருக்கும் இடையே, நிலம் தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த, 11ல், அர்ஜூனன் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்தார். அப்போது, அங்கு சென்ற அன்பரசனின் மனைவி சித்ரா, அவரிடம் தகராறு செய்துள்ளார். அதை, மல்லிகா தட்டிக் கேட்டுள்ளார். அதில், பெண்களுக்குள் கைகலப்பாகி, இருவருக்கும் காயம் ஏற்பட்டது. கரூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட, மல்லிகா, நேற்று முன்தினம் மாலை இறந்தார். வெள்ளியணை போலீசார், சித்ராவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X