பொது செய்தி

தமிழ்நாடு

வன உயிரிகளை வேட்டையாடினால் தண்டனை

Added : ஜன 14, 2019
Advertisement

கரூர்: வன உயிரினங்களை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என, மாவட்ட வன அலுவலர் அன்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையின் போது, பாரி வேட்டை என்ற சடங்கிற்காக, வன உயிரினங்களான, முயல், கீரிப்பிள்ளை, குள்ளநரி, அணில், உடும்பு மற்றும் பிற உயிரினங்களை வேட்டையாடுகின்றனர். இது, தண்டனைக் குரிய குற்றமாகும். இது போன்ற நிகழ்வுகளில் பொதுமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம். இந்த குற்றங்களுக்கு மூன்றாண்டு முதல், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்தாலோ, கேள்விப்பட்டாலோ, 94434 96218, 98421 26651 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, வன அதிகாரிகளிடம் தெரிவிக்காலம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X