பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜன 14, 2019
Advertisement

படித்துறை அமைக்க வேண்டும்: பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளி ஆற்றுப்பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் வருகின்றனர். இவர்கள், பாறைகள் உள்ள இடத்தில் சென்று துணிகள் துவைத்தும், குளித்தும் வருகின்றனர். இதனால், பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, குறிப்பிட்ட இடத்தில் படித்துறை, பாதுகாப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராதாகிருஷ்ணன், பாப்பம்பாளையம்.

ஏமாற்றுபவர் மீது நடவடிக்கை தேவை: குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சிலர் ரியல் எஸ்டேட் எனும் பெயரில் பிளாட்டுகள் போட்டு, பொதுமக்களை ஏமாற்றி பணம் பெறுகின்றனர். அந்த நிலம் அவருடையது அல்ல என்பது பின்னரே தெரிய வருகிறது. பாடுபட்ட பணத்தை, விபரம் தெரியாமல் இது போல் மோசடி பேர் வழிகளிடம் கொடுத்து ஏமாறுகின்றனர். இது போன்ற மோசடி பேர்வழிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- து. சவுந்தர், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X