பொது செய்தி

தமிழ்நாடு

குமாரபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Added : ஜன 14, 2019
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, சேலம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வழியாக சென்று, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் நிறைவு பெற்றது. வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்தாமல், துணிப்பைகளையும், காகித பைகளையும் உபயோகப்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பங்கேற்ற மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கோஷமிட்டவாறும், விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வினியோகித்தபடியும் சென்றனர். உதவி தலைமையாசிரியர் ராம் சிவாஜி, பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X