புருஷோத்தம பெருமாள் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புருஷோத்தம பெருமாள் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

Added : ஜன 14, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. மார்கழி முழுவதும் காலை, 4:00 மணி முதல் சிறப்பு வழிபாடும், பஜனையும் நடந்து வருகிறது. நேற்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருந்து, வேத வியாசர் பத்ரி நாராயண பட்டர் சுவாமிகள் வருகை தந்தார். இவரை பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் மற்றும் ராமானுஜருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பின்னர், வேத வியாசர் பத்ரி நாராயண பட்டர் அருளாசி வழங்கி பேசுகையில்,'' தினமும் நாம் வழக்கமான பணிகளை செய்வது போல், கோவிலுக்கு சென்று சுவாமியை வணங்க நேரம் ஒதுக்க வேண்டும். ஆழ்வார்கள், 11 பேர் இருந்தாலும், மார்கழி மாதம் என்றால் அது ஆண்டாளுக்கு உகந்த மாதம் என்றாகிவிட்டது. இதற்கு காரணம், சிறு வயது முதலே பெருமாளை தவமாக எண்ணி ஆண்டாள் வணங்க துவங்கியதுதான்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X