பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜன 14, 2019
Advertisement

மயானத்தை பராமரிக்கணும்! ப.வேலூர், காவிரிக்கரையில் உள்ள மயானம், பராமரிப்பின்றி புதர் மண்டிய நிலையில் காடு போன்று காட்சியளிக்கிறது. இதனருகில், பராமரிப்பின்றி உள்ள இடுகாடும் பயன்படுத்தப்படுகிறது. விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இறுதிச் சடங்குகளுக்கு வருபவர்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். புதிய எரிவாயு தகன மேடை பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்குகிறது.
திருகு இல்லாத குடிநீர் குழாய்: பள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஐந்துபனையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, சாலைப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இது சேதமடைந்துள்ளது. திருகு இல்லாததால், குச்சியை வைத்து அடைத்துள்ளனர். குடம் வைத்து பிடிப்பதற்கு கான்கிரீட் தளமும் இல்லை. குடிநீர் வீணாவதால், அந்த இடம் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. எனவே, குழாயை சீரமைத்து, கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து பாதிப்பு; நடவடிக்கை தேவை: குமாரபாளையம், தம்மண்ணன் வீதியிலிருந்து, பழைய காவேரி பாலம் செல்லும் சாலையில், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் லாரி, டிராக்டர் ஆகிய வாகனங்களை, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பணிகளை செய்து கொண்டிருந்தனர். இதனால், பொதுமக்கள் அந்த வழியில் செல்ல முடியாமல், அவதிக்கு ஆளாகினர். இது போன்று, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பயணிகள் இருக்கை உடைப்பால் அவதி: மல்லசமுத்திரம் ஒன்றியம், சோமணம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பயணிகள் இருக்கை, கடந்த சில மாதங்களுக்கு முன், மர்ம நபர்களால் சேதமடைந்தது. பயணிகள் பஸ்சுக்காக, நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், முதியோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, 'அந்த இருக்கையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

கற்கள் குவிப்பு; விவசாயிகள் தவிப்பு: மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கால்நடை மருத்துவமனை துவங்கப்பட்டது. கட்டடம் முன், கற்கள் உள்ளன. விவசாயிகள், தங்கள் கால்நடைகளை கட்ட போதிய இடவசதியின்றி தவிக்கின்றனர். மருத்துவ முகாம் நடக்கும் சமயங்களில், விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. கற்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X