பொது செய்தி

தமிழ்நாடு

200 பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வழங்கல்

Added : ஜன 14, 2019
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழி குஞ்சுகள் வழங்கும் விழா கூட்டப்பள்ளிகாலனி அடுத்துள்ள கால்நடை பராமரிப்பு துறை வளாகத்தில் நடந்தது. கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் வரவேற்றார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர், திருச்செங்கோடு ஒன்றியத்தை சேர்ந்த, 200 பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வழங்கினர். அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,'' நாமக்கல் மாவட்டத்தில், 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், விரைவில் வழங்கப்பட உள்ளது,'' என்றார். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X