தனியார் பள்ளி விடுதியில் திரையிடப்பட்ட, பேட்ட| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி விடுதியில் திரையிடப்பட்ட, 'பேட்ட'

Added : ஜன 14, 2019

திருச்சி: துறையூர் தனியார் பள்ளி விடுதியில், மாணவர்கள், பேட்ட படம் பார்த்த விவகாரம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி நடித்த பேட்ட படம், 10ம் தேதி வெளியானது. திருச்சி, துறையூர் பாலக்கரையில், தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி விடுதியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.விடுதி மாணவர்களுக்கு, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சினிமா திரையிடப்படும். 'தமிழ் ராக்கர்ஸ்'சில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பேட்ட படம், நேற்று முன்தினம் இரவு, புரொஜக்டரில் திரையிடப்பட்டுள்ளது. தகவலறிந்த ரஜினி ரசிகர்கள், அங்கு வந்து கேட்டபோது, பள்ளி நிர்வாகம் தரப்பில், தவறு நடந்ததாக, மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பிலும், துறையூர் அஜந்தா தியேட்டர் சார்பிலும், போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆயினும், போலீசார் வழக்குப் பதிவு செய்ய தயங்குவதாக, ரசிகர்கள் புலம்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X