மோடியை ராகுல் திட்டியது தவறு: தேவகவுடா| Dinamalar

மோடியை ராகுல் திட்டியது தவறு: தேவகவுடா

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேவ கவுடா, ராகுல், பிரதமர், மோடி, ரபேல் ஒப்பந்தம், லோக்சபா தேர்தல்

பெங்களூரு : காங்., தலைவர் ராகுலை நாட்டின் அடுத்த பிரதமராக ஆதரிப்பதில் தயக்கம் இல்லை என முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், மோடி அரசு விளம்பரத்திற்காகவே சிலவற்றை செய்கிறது. விளம்பரத்திற்காக நாட்டின் வேறு எந்த பிரதமரும் இந்த அளவிற்கு பணத்தை செலவிடவில்லை. கார்ப்பரேட்களின் பணத்தில் மோடி விளம்பரம் தேடுகிறார். ஊழல் இல்லா இந்தியா என்பது தான் அவரின் முதல் பேச்சில் கூறியது. இது வரை செய்தாரா அவர்?
ரபேல் விவகாரத்தை பொறுத்தவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பாக கையாள்கிறார். ஆனால் பிரதமர் ஏன் வாய்திறக்காமல் அமைதி காக்கிறார்? ஏன் ரபேல் ஒப்பந்தம் பற்றி பார்லி.,க்கு வெளியில் மட்டும் பேசுகிறார்? ராகுல், மோடியை திருடன் என்று சொன்னதை என்னால் ஏற்க முடியாது. பிரதமரை அவமதிக்கும் வகையிலான எந்த பேச்சும் தவறானது. அவர் நாட்டின் பிரதமர். அரசியல் கட்சி தலைவர் அல்ல என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு.

வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. பிரசாரம் மட்டும் செய்வேன். காங்., உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ராகுல் வளர்ந்து வரும் இளம் தலைவர். அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. இருந்தும் இன்னும் மேம்படுத்த தளம் அமைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணி கட்சி தலைவரான அவர் பிரதமராவதற்கு அவரை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ராகுல் பிரதமராக வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீதம் இடஒதுக்கீட்டு சட்டத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். ஆனால் மற்றவர்கள் எதிர்ப்பது ஏன் என்று தான் தெரியவில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marshal Thampi - Nagercoil,இந்தியா
15-ஜன-201902:49:15 IST Report Abuse
Marshal Thampi "ஹலி ஹலீ மேம் ஸோர் ராஜீவ் காந்தி சோர்" என்று நீங்கள் திட்டவில்லையா. ஏன் பதுங்குகிறீர்கள்.
Rate this:
Share this comment
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜன-201915:28:48 IST Report Abuse
Endrum Indianகலி கலி மேம் ஷோர் ராஜேச்வ காந்தி சோர், உண்மை தானே சொல்லியிருக்கின்றார்கள் முஸ்லீம் நேரு குடும்பத்தை பார்த்து....
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
14-ஜன-201922:30:07 IST Report Abuse
Gnanam ஆதாரமின்றி அர்த்தமற்ற பேச்சு பேசுகிறார் ராகுல் ஜி. மனப்பக்குவம் இன்னும் வரவில்லை. இவரை எப்படி பிரதமர் பதவிக்கு ஆதரிக்கிறீர் என்பதுதான் புரியவில்லை. வாரிசு அரசாட்சியா அல்லது ஜனநாயகமா தலைவரே?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
14-ஜன-201921:36:00 IST Report Abuse
 nicolethomson அப்போ உங்க பையனோட படத்தை பிளெக்ஸ் பேனர் போட்டு எல்லா BMTC பேருந்திலும் ஒட்டிக்கிட்டு இருக்காங்களே அது யாரோட பணம் சார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X