உ.பி.,யில் பா.ஜ., ஒரு சீட் கூட வெல்ல முடியாது: தேஜஸ்வி யாதவ்

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (32)
Advertisement
தேஜஸ்வி யாதவ், பா.ஜ., மாயாவதி, உ.பி., கூட்டணி

லக்னோ : பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றும், உ.பி.,யில் மொத்தமாக துடைத்தெறியப்படும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், கட்சி நிர்வாகியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை தேஜஸ்வி யாதவ் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மாயாவதி - அகிலேசின் நடவடிக்கையை மக்கள் வரவேற்கின்றனர். உ.பி., மற்றும் பீகாரில் பா.ஜ., முற்றிலும் துடைத்து எறியப்படும். உ.பி.,யில் அவர்களால் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக கூட்டாக அறிவித்துள்ள மாயாவதியும், அகிலேசும் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் சோனியாவின் ரேபர்லி தொகுதியிலும், ராகுலின் அமிதி தொகுதியிலும் மட்டும் தாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போதில்லை என அறிவித்திருந்தன. இவ்விரு கட்சிகளும் புறக்கணித்ததால் உ.பி.,யில் 80 தொகுதிகளிலும் தாங்கள் தனித்து போட்டியிட உள்ளதாக காங்., அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
San - Madurai ,இந்தியா
14-ஜன-201922:02:20 IST Report Abuse
San BJP will get 70+
Rate this:
Share this comment
Cancel
Suresh Palanisamy - Coimbatore ,இந்தியா
14-ஜன-201920:30:27 IST Report Abuse
Suresh Palanisamy நீ சொன்னால நடக்காதுலே.. உ.பி ல பிஜேபி 70+ ஜெயிக்கும்லே..
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
14-ஜன-201919:42:04 IST Report Abuse
Rajavel ஊழல், தேசத்துரோக , வெள்ளைக்காரனுக்கு வால்பிடித்த, சுதந்திரத்தை எதிர்த்த, மதவெறி , ஜாதிவெறி கும்பல் RSS மற்றும் பிஜேபி. நாடு நலம் பெற இவர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X