பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (91)
Share
Advertisement
புதுடில்லி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறி உள்ளார்.பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதில் தமிழில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பொங்கல் வாழ்த்து, மோடி, டுவிட்டர், மகரசங்கராந்தி

புதுடில்லி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறி உள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதில் தமிழில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, துக்ளக் நாளிதழின் 49 ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு அதன் வாசகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, அச்சமின்றி தனித்துவத்துடன் செயல்பட்டு துக்ளக் இதழை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற சோ.ராமசாமிக்கு தான் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். துக்ளக் ஆண்டுவிழாவில் எதிர்பாராத விதமாக தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும், வாசகர்கள் தங்களின் கேள்விகளை அனுப்பும்படி கேட்டுள்ள பிரதமர், அதற்கான பதிலை அடுத்த இதழில் அளிப்பதாகவும் கூறி உள்ளார்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலம் நடத்தப்படும் சர்வேயில் கலந்து கொள்ளும்படியும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
15-ஜன-201909:52:55 IST Report Abuse
Viswam பொங்கல் வாழ்த்துகள் தமிழில் சொன்ன பிரதமருக்கு ஸ்பெஷல் நன்றி. நீங்க ஹிந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொல்லியிருந்தாலும் அதற்கும் குற்றம் இங்கே காண்பார்கள். Pongal மீம்ஸ் எல்லா மொழிகளிலும் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வருகிறோம். அவர்களும் அதே போல தான் மொழி தெரியாவிட்டாலும் திருப்பி வாழ்த்து சொல்லுகிறார்கள். அப்போதெல்லாம் தப்பாக நினைக்காத மனது நீங்கள் தமிழில் Pongal வாழ்த்து சொன்னபோது தமிழனுக்கே உண்டான விரும்தோம்பலை விட்டுவிட்டு அரசியல் அநாகரீகத்துடன் காழ்புணர்ச்சியோடு கருத்து போடுவதையே முக்கியமாக நினைக்கும் அளவிற்கு கலாச்சார சீரழிவிற்கு இங்குள்ள மாநில கட்சிகள் தமிழர்களை தள்ளியுள்ளார்கள். அரசியல் எதிரியாக நினைத்தாலும் இங்கிதம் தெரியாமல் பேசுவது எமது கலாச்சாரத்தில் பண்டைய காலங்களில் இல்லை. என்ன செய்வது எல்லாம் கழககங்களின் தாக்கம்.
Rate this:
15-ஜன-201913:49:46 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்நீங்கள் சொன்னது ஒரு வேலை 2019 தேர்தல் அறிக்கை போல உள்ளது மேலே சொன்னவையில் எது நடந்தது ஒன்று சரியாய் நடந்தது சிறு குறு வியாபாரி DEMONITIZATION / GST இரண்டிலும் காணாமல் போனான் எவ்வளவு பேர் வேலை இழப்பு இவ்வளவு இழந்தும் 28 % உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லா வரி சுமை ஐந்து மாநில தேர்தலில் விழுந்த அடித்தான் இந்தியாவின் ஹிட்லர் இறங்கிவருகிறார் ,கடந்த, 2018, டிசம்பரில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 3.80 சதவீதமாக சரிவடைந்துள்ளது, ரபில் என்ற டீலை மேக் இந்த இந்தியா என்று சொல்லும் மோடி HAL க்கு கொடுக்காமல் ஏன் அம்பானிக்கு கொடுத்தார் இவ்வளவு ரிவிட் அடித்தும் இன்னும் ஆடு கசாப்பு காரனை நம்புவது வேடிக்கை இல்லை வாடிக்கை ஆகிவிட்டதோ இவ்வளவு நடந்தும் மோடி டமில் இல் பொங்கல் சொன்னவுடன் மயன்கிட்டேர்...
Rate this:
Guru Nathan - Chennai,இந்தியா
15-ஜன-201918:19:34 IST Report Abuse
Guru Nathan2016 வேலை இழந்தவன் ஒருத்தன கண்ணுல காட்டுங்கப்பா ? அப்போ வேலை போனவன் எல்லாம் இன்றுவரை சாப்பாட்டுக்கு என்ன பன்றான் ? அம்பானி யூம் இந்தியன் தான் . என்னால் அம்பானி கம்பெனியில வேலை வாங்க முடியும். ஆனா HAL வேலை வாங்க முடியாது . இருக்குற எல்லா பொது நிறுவனத்தையும் கலைச்சிட்டு , தனியார் கிட்ட கொடுக்கணும் ....
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
14-ஜன-201922:17:42 IST Report Abuse
Anbu என்ன பிரயோஜனம் ?
Rate this:
15-ஜன-201913:48:16 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்என்ன பிஜேபி பக்தஸ் எல்லாம் விரக்தி ஆயிட்டேள், ஒருத்தர் பிஜேபி வருவது இரண்டாம் பட்சம் என்கிறார் முடிவு கட்டிவிட்டேர்களா...
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
14-ஜன-201921:37:52 IST Report Abuse
elakkumanan நன்றி எம் நாட்டின் எதிர் காலமே. ஒரு வேண்டுகோள். தயவு செய்து இனிமேல் டுமீளனுக்கு வாழ்த்து சொல்லாதீர்கள். காரணம் : நாங்கள் திருடர்கள் மன்னிக்கவும் திராவிஷங்கள். சாராயம், எச்ச பிரியாணி, லஞ்சம், திருட்டு ரயில், மதச்சார்பின்மையை உயிரினும் மேலாக மிதிப்பவர்கள் மன்னிக்கவும் மதிப்பவர்கள். வார்த்தை பிரளுது ஏன்னா நாங்கள் டாஸ்மாக் நாடு. புயல் நிவாரணம் வாங்கி பொங்கல் இலவசமா கொடுப்போம் காவேரி தண்ணி பிரச்னையை தீர்த்துவச்ச புத்திசாலி ஒங்களவிட காவேரியை அடகு வச்சு டுமிழனுக்கு டிவி கொடுத்தவங்கதான் முக்கியம் சார். ப்ளீஸ் டுமிலன்ஸோட வரலாறு தெரியாம வாழ்த்து சொன்னதுக்கு நன்றி. பி கு : சுதந்திரம் வேணாமுன்னு வெள்ளைக்காரனுக்கிட்ட மனு கொடுத்திட்ட மனு நீதி வம்சம் நாங்க. மன்னிக்கவும் மனு, நீதியெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை. எங்களுக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மதசார்பற்ற முஸ்லீம் லீக் கூட்டணி. நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X