கர்நாடகாவில் "ஆபரேஷன் லோட்டஸ்" : அச்சத்தில் காங்.,

Updated : ஜன 14, 2019 | Added : ஜன 14, 2019 | கருத்துகள் (42)
Advertisement
கர்நாடகா, காங்கிரஸ், பா.ஜ., ஆபரேஷன் லோட்டஸ், குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம்

பெங்களூரு : கர்நாடகாவில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் காங்., எம்எல்ஏ.,க்களை பா.ஜ., தங்கள் பக்கம் இழுப்பதை உண்மை இல்லை என காங் - பா.ஜ., இரு கட்சிகளும் மறுத்து வந்தாலும், காங்., மற்றும் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உள்ளுக்குள் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளன.

காங்., எம்எல்ஏ.,க்கள் 3 பேர் பா.ஜ., வினருடன் தொடர்பில் இருப்பதாகவும், காங் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த 12 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆளும் கட்சி எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்கி பா.ஜ., கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.


உண்மை தான்


இந்த அரசியல் குழப்பம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், எனது ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. என்னிடம் சொல்லிவிட்டு தான் எம்எல்ஏ.,க்கள் மும்பை சென்றனர். காங்., எம்எல்ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் தான் உள்ளனர் என்றார். அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், காங் எம்எல்ஏ.,க்கள் 6 பேர் மும்பையில் இருப்பது உண்மை தான். அவர்களிடம் பா.ஜ., பேரம் பேசி வருவதாக தகவல் வருகிறது. ஆனால் அவர் யாரை சந்திக்க போகிறார்கள் என தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.


அவசர கூட்டம்


கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான எடியூரப்பா கூறுகையில், இந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இது காங் - மஜத கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தால் வந்தது. பா.ஜ.,வுக்கும் அவர்கள் கட்சி எம்எல்ஏ.,க்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லோக்சபா தேர்தலுக்காக எங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களை ஊக்கமூட்டவதிலேயே எங்கள் கவனம் உள்ளது என்றார். இந்நிலையில் ஆபரேஷன் லோட்டஸ் குறித்தும், மாயமான காங்., எம்எல்ஏ.,க்கள் குறித்து ஆலோசிப்பதற்காகவும் கர்நாடக காங்., அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜன-201901:08:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் .. தேர்தலில் ஆப்பு வைத்தாலும் அறிவு வளரவில்லை..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜன-201922:16:35 IST Report Abuse
Nallavan Nallavan இந்த விஷயத்தில் காங்கிரசின் சரியான சிஷ்யன் பாஜக .....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜன-201901:05:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்காவி காங்கிரஸ்....
Rate this:
Share this comment
Cancel
123 - Nellai,இந்தியா
14-ஜன-201922:03:19 IST Report Abuse
123 கர்நாடக எடியூரப்பா முதல்வராக இருந்தபோது சட்டசபையில் பலான படம் பார்த்த பாஜ mla .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X