பிரியங்காவுக்கு வழிவிடும் சோனியா

Updated : ஜன 14, 2019 | Added : ஜன 14, 2019 | கருத்துகள் (53)
Advertisement
சோனியா, பிரியங்கா, ரேபெர்லி, ராகுல், லோக்சபா தேர்தல்

புதுடில்லி : வரும் லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலத்தில் உள்ள தனது ரே பரேலி தொகுதியில் மகள் பிரியங்காவை போட்டியிட வைக்க காங்., தலைவர் சோனியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


வழி வழி வந்த தொகுதி:


ரேபரேலி தொகுதியில் 1967 முதல் 1971 வரை முன்னாள் பிரதமர் இந்திரா தான் வெற்றி பெற்றார். பிறகு 1999 முதல் தற்போது வரை இந்த தொகுதியில் சோனியா தான் வெற்றி பெற்று வருகிறார். இப்போது தனது தொகுதியை மகள் பிரியங்காவுக்காக விட்டுத்தர சோனியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


காரணம் என்ன;


வரும் தேர்தலில் போட்டியிடுவ குறித்து பிரியங்கா இன்னும் முடிவு செய்யவில்லை. உடல்நிலை குன்றி இருப்பதாலும், தேர்தலில் போட்டியிட்டு பணியாற்றும் அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்காது என்பதாலும் சோனியா போட்டியிட மாட்டார் என்கிறார்கள். அப்படி சோனியா போட்டியிடாவிட்டால், பிரியங்காவுக்கு அந்த இடம் தரப்படலாம். அந்த கோரிக்கையை பிரியங்கா ஏற்பார் என்றே காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உ.பி.,யில் சமாஜ்வாதியும் - பகுஜன் சமாஜ் கட்சியும் புறக்கணித்து விட்டதால் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக காங்., ஏற்கனவே அறிவித்துள்ளது. கூட்டணியில் காங்., ஐ சேர்க்காவிட்டாலும் சோனியாவின் குடும்ப தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த போவதில்லை என மாயாவதியும், அகிலேசும் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

ரேபரேலி தொகுதியில் தாய்க்கு பதிலாக தான் போட்டியிட ராகுல் முடிவு செய்து விட்டால், அவரின் அமேதி தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாம் என்று காங்., வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. அதே சமயம் அமேதியில் ராகுலை எதிர்த்து இந்த முறையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை களமிறக்க பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளதாம். ரேபரேலி போன்ற எளிதில் வெற்றி பெறும் தொகுதியில் போட்டியிட்டால் வேட்பார்களை தேர்வு செய்யவும் பிரசாரத்திற்கும் ராகுலுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே வரும் லோக்சபா தேர்தலில் பிரியங்காவை பிரசாரம் செய்ய வைக்க காங்., முடிவு செய்துள்ளது. இது வரை ராகுல் மற்றும் சோனியாவிற்காக ரேபரேலி- அமேதி தொகுதிகளிலேயே அதிகம் பிரசாரம் செய்தார் பிரியங்கா,. இந்த முறை உ.பி.,யின் பிற தொகுதிகளிலும் பிரியங்காவை பிரசாரம் செய்ய வைக்க காங்., முடிவு செய்துள்ளது. சமீப காலமாக காங்.,கில் பல பதவிகளுக்கும் பிரியங்காவின் பெயர் அடிபட்டி வகிறது. 3 மாநில காங்., வெற்றிக்கு பிறகு ராஜஸ்தானில் சச்சின் பைலட், ம.பி.,யில் ஜோதிர் ஆதித்யா ஆகியோர், முதல்வர் பதவி கி டைக்காத கோபத்தில் இருந்தபோது, பிரியங்கா தான் அவர்களை சமாதானம் செய்ததாக தெரிகிறது.


அகெய்ன்ஸ்ட் அவுட்ரேஜ்:


தற்போது தனது அரசியல் பிரவேசம் மற்றும் அரசியல் ஆசை குறித்து விரிவாக புத்தகம் ஒன்றை பிரியங்கா எழுதி வருகிறார். அகெய்ன்ஸட் அவுட்ரேஜ்'' என பெயிரிடப்பட உள்ள இந்த புத்தகம் வரும் மார்ச் மாதம் வெளியிடப்பட உள்ளது. சுமார் 300 பக்கங்களை கொண்டதாக இந்த புத்தகம் இருக்கும்.
பிரியங்காவுக்கு பெரிய பிரச்னையாக இருப்பது கணவர் ராபர்ட் வதேரா மீது அரியானாவிலும் ராஜஸ்தானிலும் இருக்கும் நில மோசடி மற்றும் பண முறைகேடு வழக்குகள் தான். ராஜஸ்தானில் முந்தைய வசுந்தரா ராஜே ஆட்சியின் போது ராபர்ட் வதேரா மீது தொடரப்பட்ட வழக்கை நீர்த்துப் போகச் செய்ய, தற்போதைய காங்., முதல்வர் அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அரியானா பண முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பியது. தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தவும் அரசின் பல துறைகள் தயாராக உள்ளது சோனியா குடும்பத்திற்கு தலைவலியாக ''ஆனால் அரசு துறைகளின் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், இனியும் அளிக்க உள்ளதாகவும்'' ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - sel,இந்தியா
15-ஜன-201900:33:30 IST Report Abuse
makkal neethi வடையாரின் வாய்க்கு லட்டு ..பக்தர்களின் பார்வைக்கு பாய்சன் ..பாரத மக்களுக்கு பாரத மாதா
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
14-ஜன-201922:32:55 IST Report Abuse
கோமாளி பரம்பரை.. அரச குடும்பம்.. வாரிசு அரசியல்.. முன்னர் இளவரசர் பப்பு... இப்போது இளவரசி... வாழ்க ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
14-ஜன-201922:31:36 IST Report Abuse
T M S GOVINDARAJAN இந்த பிரியங்கா வருகையை வைத்து தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு உள்நாட்டு, வெளிநாட்டு தேசவிரோத சக்திகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். இனிமேல் இந்த தேசவிரோதிகள் ஆங்கிலத்தில் தான் அதிக அளவில் பதிவு செய்வார்கள் தமிழில் பதிவு செய்தால் உண்மை தமிழர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று. பிரியங்காவை வரவேற்கும் முட்டாள்களே .அப்படியே அவரது மாமியார் அவர்களையும் ஒரு தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வையுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X