அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரை விசாரிக்க தனி குழு: கவர்னரிடம் ஸ்டாலின் முறையீடு

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (34)
Advertisement
கவர்னர், ஸ்டாலின், D.M.K,Governor,M.K.Stalin,Stalin,ஆளுநர்,கவர்னர்,தி.மு.க,

சென்னை: கோட நாடு எஸ்டேட்டில் நடந்த கொலை தொடர்பாக முதல்வர் பழனிசாமியை விசாரிக்க நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து மனு கொடுத்தார்.
கவர்னரை சந்தித்த பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முகாமாக இருந்து வந்தது கோட நாடு. அங்கு அரசு கோப்புகள் பல இருந்தன. கோடநாடு கொலை சம்பவத்தில் பழனிசாமி குற்றவாளி என்று சொல்லப்படுகிறது. குற்றம் சுமத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர். ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மரணம் விபத்துதான் என எஸ்பியை தெரிவிக்க வைக்க முதல்வர் அழுத்தம் கொடுத்துள்ளார். எஞ்சி இருக்கும் ஆதாரங்களை முதல்வர் அழிக்க முயற்சிக்கிறார்.
கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பழனிசாமி தமிழகத்திற்கு அவமானம். சிறப்பான விசாரணை நடக்க வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமியை இந்த பொறுப்பில் இருந்து நீக்கி வைக்க வேண்டும். இதனை ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கவர்னரிடம் தெரிவித்துள்ளேன். என்னால் எடுக்கக்கூடிய நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் உறுதி அளித்துள்ளார். கோட நாட்டு சம்பவத்தின் பின்புலத்தில் எடப்பாடி பழனிசாமியே உள்ளார்.

கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம். மேலும் கோர்ட்டையும் அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saro -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201907:38:21 IST Report Abuse
Saro சரியில்லை என்றால் உடனே வெளி நடப்பு செய்யுங்கள் தளபதியாரே
Rate this:
Share this comment
Cancel
Saro -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201907:38:16 IST Report Abuse
Saro சரியில்லை என்றால் உடனே வெளி நடப்பு செய்யுங்கள் தளபதியாரே
Rate this:
Share this comment
Cancel
Saro -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201907:38:19 IST Report Abuse
Saro சரியில்லை என்றால் உடனே வெளி நடப்பு செய்யுங்கள் தளபதியாரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X