சின்ன அதிகாரியின் 'சின்னத்தனம்'

Updated : ஜன 15, 2019 | Added : ஜன 15, 2019
Share
Advertisement
பொங்கல் கொண்டாட்டத்துக்கு கரும்பு, மஞ்சள், பானை மற்றும் பூக்கள் வாங்க, கடை வீதியில்கூட்டம் அலைமோதியது. கூட்டத்தோடு கூட்டமாக சித்ராவும், மித்ராவும், கையில் துணிப்பையோடு, நடந்து சென்றனர்.''பொங்கல் பரிசு வாங்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருச்சுடி''''வாங்குனீங்களா.... இல்லீங்களா...''''இல்லடி. பொருள் கொடுக்கறதுல எவ்வளவு 'அரசியல்' பண்ணிட்டாங்க... அப்பப்பா.
 சின்ன அதிகாரியின் 'சின்னத்தனம்'

பொங்கல் கொண்டாட்டத்துக்கு கரும்பு, மஞ்சள், பானை மற்றும் பூக்கள் வாங்க, கடை வீதியில்கூட்டம் அலைமோதியது. கூட்டத்தோடு கூட்டமாக சித்ராவும், மித்ராவும், கையில் துணிப்பையோடு, நடந்து சென்றனர்.

''பொங்கல் பரிசு வாங்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருச்சுடி''''வாங்குனீங்களா.... இல்லீங்களா...''''இல்லடி. பொருள் கொடுக்கறதுல எவ்வளவு 'அரசியல்' பண்ணிட்டாங்க... அப்பப்பா. திடீர்னு பரிசு கொடுக்க கோர்ட் தடையின்னு, தகவல் பரவியதும், ஆளுங்கட்சிக்காரங்க தீயா வேல செஞ்சாங்க. 'வாட்ஸ் ஆப்' குரூப்ல மெேஸஜ் போட்டு, சர்க்கரை கார்டுக்காரங்களை கடைக்கு வரவச்சுட்டாங்க,

''''அது சரிங்க்கா... பொங்கல் பரிசு அரசாணையில, 15 ரூபாய் மதிப்புள்ள துணிப்பை கொடுக்கனும்னு சொல்லியிருந்தாங்களே,''''ம்.. ஹூம்.. திடீர்னு ஆர்டர் போட்டதும், லட்சக்கணக்கான துணிப்பையை கொடுக்க முடியாம போச்சாம். மறுபடி ஒருநாளில் துணிப்பை கொடுக்கலாம்னு இருக்காங்களாம்,

''''இதுல, ஆளுங்கட்சிக்கும், தினகரன் கட்சிக்காரங்களுக்கும் ஏதோ நடந்துச்சுன்னு சொல்றாங்களே,''

''ஆமாம்.. மித்து! 42வது வார்டு 'மாஜி' கவுன்சிலர், கூட்டுறவுத்துறையில பேசி, பொங்கல் பரிசு கொடுக்க ஏற்பாடு செஞ்சிருக்காரு. அவரு, தினகரன் கட்சியில் இருக்கறதால, ஆளுங்கட்சிக்காரங்க, அவர் கொடுக்கக்கூடாதுன்னு, 'தடா' போட்டுட்டாங்க. பொருள் வழங்காததால, பொதுமக்கள் ரோட்டில் உட்கார்ந்து மறியல் பண்ணிட்டாங்க''

''அப்புறம் போலீஸ் மூலம், மக்களை சமாளிச்சுட்டாங்க. இவங்க அரசியலால, வார்டு மக்களுக்கு, 'லேட்'டாத்தான் பொருள் கிடைச்சுதாம்,'' என்றாள் சித்ரா.

பொங்கல் பானை அழகாக அடுக்கி வைத்திருந்த ஒரு கடைக்கு சென்று, இரண்டு பானைகளை, பேரம் பேசாமல் வாங்கி கொண்டு, ''ஏய்... மித்து. சீக்கிரம் வாடி. தாராபுரம் ரோட்டில் போய் கரும்பு வாங்கிட்டு, கிளம்பிடலாம்,'' என, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

ஓடிவந்து பில்லியனில் உட்கார்ந்த மித்ரா, ''ம்.. போலாம் ரைட்,'' என்றாள்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் எறும்பு போல் ஊர்ந்து கொண்டிருக்க, சித்ராவின் வண்டியும் அதில் இணைந்தது.''எங்களுக்கு, 2 ஆயிரம் ரூபா செலவு வச்சுட்டாங்கனு, ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பி தள்றாங்களாம்'' என்றாள் மித்ரா.

''அவங்களுக்கு என்னடி செலவு?''''மொத்தமா கரும்பு கொள்முதல் செஞ்ச, ஓரிடத்துல போட்டுட்டாங்க. திருப்பூர் சுற்றிலும் இருக்கற சொசைட்டிக்காரங்க, தனியா வண்டி பிடிச்சு, கரும்ப எடுத்துட்டு போயிருக்காங்க.

ஒவ்வொரு கடை ஊழியரும், ஆயிரம் ரூபா போட்டு, வாடகை கொடுத்திருக்காங்க. அதேமாதிரி, வேட்டி, சட்டை எடுத்து வர்றதுக்கும் செலவு பண்ணாங்களாம்,''
''அட... அந்த பணத்தை வேறெதிலாவது 'அட்ஜஸ்ட்' பண்ணிப்பாங்க. அது ஒரு பெரிய மேட்டரே இல்லடி,'' சித்ரா சொல்லவும், ''அக்கா... பேசாம, நான் நடந்தே வர்றேனே. இவ்ளோ 'ஸ்லோ'வா போறீங்களே,'' மித்ரா சிரித்தாள்.

''அட.. ஊதியூர் மக்கள் மாதிரி புரியமா பேசாதே. கொஞ்சம் முன்னாடி பாருடி. எவ்ளோ வண்டி போகுதுன்னு,'' கடிந்து கொண்டாள் சித்ரா.

''ஆமாங்க்கா.. அதுசரி. அதென்ன ஊதியூர் மேட்டர்?''

''காங்கயம் பக்கத்துல போன வாரம், கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, சப்கலெக்டர் ஆபீஸ் முற்றுகைக்கு, 500 ரூபாய் பேசி, அப்பாவி ஜனங்களை கூட்டிட்டு போயிட்டு, 300 மட்டும்தான் கொடுத்தாங்களாம். மீதி, 200 ஐ, ரத்தத்தின் ரத்தங்கள் 'லபக்'கிட்டாங்களாம்,''

''ஓேஹா. அதுதானே பார்த்தேன். சப்-கலெக்டர் ஆபீசுக்கு வந்த கூட்டத்தை விட, கோவில் முன் ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் கம்மியாதானே இருந்தது. ஆனால், எப்படி உள்ளூர்காரர்கள் வந்தனர்,'' என, கேள்வி கேட்டாள் மித்ரா.

''அட நீ வேற. கிட்டத்திட்ட 1,500 ஏக்கர் நிலத்தில், ரெண்டு கட்சிக்காரங்களும் வஞ்சனையின்றி ஆக்கிரமிப்பு செய்திருக்காங்க. இதில் ஒரு பகுதியை வாங்கின, பால் பண்ணைக்காரங்கதான், மக்களை துாண்டி விட்டதா, உள்ளூர்காரங்களே, சொல்றாங்க. இப்ப பிரச்னை என்னன்னா... ரோட்டுக்கு வந்த மக்களில் சிலர் தடியடியிலும் சிக்கி, 'கேஸி'லும் மாட்டிட்டாங்க,'' என்று விளக்கினாள் சித்ரா.

''கோவில் நிலத்தை ஆக்கிரமிச்சது தப்புதானேக்கா...''''அட.. உனக்கு தெரியுது. அவங்களுக்கு தெரியாம போச்சே... அங்க நடந்த தடியடிக்கு காரணமே போலீஸ்தானாம். இந்து முன்னணிக்காரங்க, விளக்கேத்தி, போராட்டம் நடத்தி முடிந்ததும் கிளம்ப தயாரானாங்க. அப்ப குபுகுபுன்னு மக்கள் கூடிட்டாங்க,''

''ஆனா.. அவங்களை கட்டுப்படுத்த, போலீஸ் ஒண்ணும் செய்யாம, நின்னுட்டே இருந்ததால, அவங்க நெருக்கியடிச்சிட்டு, தகாத வார்த்தைகளில் பேசவும், பிரச்னை ஆரம்பிச்சுடுச்சு. இதனால, தடியடி நடத்தி கலைச்சிட்டாங்களாம். இந்த களேபரத்கில், இன்ஸ்பெக்டரோட, 'வாக்கி டாக்கி'மிஸ் ஆயிடுச்சாம்,''''வாக்கி டாக்கி கிடைச்சுதா?''

''ம்...ம்.. மக்கள் எல்லாம் ஓடின பின்னாடி பார்த்த போது, கொஞ்சம் தள்ளி கிடந்துதாம். அதைப்பார்த்தவுடன்தான், இன்ஸ்க்கு, மூச்சே வந்துதாம்டி,''அப்போது, பொங்கல் சிறப்பு பஸ் சென்றது.

அதைப்பார்த்த மித்ரா, ''அரசு பஸ் அதிகாரிகள் ஒருவழியாக இறங்கி வந்து, சிறப்பு பஸ்களை ஓட்ட வச்சிட்டாங்க. பொதுமக்கள் எப்படியும் பிரச்னையில்லாமல் பண்டிகைக்கு ஊருக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க,''

''அப்புறம்க்கா.. பூராவுமே புது பஸ்கள் வந்ததால, மக்களுக்கு ரொம்பவும் சந்தோஷமா போச்சாம். ஆனால், அதிகாரிகளுக்குதான் கொஞ்சம் வருத்தமாம்,''''ஏண்டி.. எதனால?''''அக்கா... 'டஞ்சன்' பஸ்களா இருந்தா, சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதுன்னு, பல வகையில் 'கல்லா' கட்டியிருப்பாங்க. இப்ப முடியாதே!' என, சிரித்தாள் மித்ரா.

''அட.. நீ.. வேற! அவங்ககிட்டே இல்லாத ஐடியாவா? லேட்டஸ்டாக ஒரு வித்தையை கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா? பெங்களூரிலிருந்து ரீபில்ட் டயர்களை வாங்கிட்டு வந்து, அதில், புதிய டயரோட வரிசை எண்ணை சூடு பண்ணி போட்டு, பஸ்சில் மாட்டி, காசு பாக்கறாங்களாம். அதுவும் பாதியில், பிரச்னையாச்சுன்னா, டிரைவருக்கு 'பைன்' போடுறாங்களாம்,''என்றாள் சித்ரா.

''என்னென்ன 'டெக்னிக்' பண்றாங்கன்னு பாருங்க்கா?'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.''பெரிய அளவில் மாற்றம் வந்தா மட்டுந்தான், எல்லோரும் மாறுவாங்க. அட... சொல்ல மறந்துட்டேன், தி.மு.க., நிர்வாகி தற்கொலைக்கு, அதே கட்சியை சேர்ந்த ஒருத்தர்தான் காரணமுன்னு, அவங்க கட்சிக்காரங்களே சொல்றாங்களாம்,''''யாருக்கா.. என்ன பிரச்னை?''

''சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த, அந்த கட்சி பகுதி செயலாளர் கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதுக்கு முந்தயை நாள், வீட்டை விற்க, பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றுள்ளார். ஆனால, திடீருன்னு, மாயமாகிட்டார். இடத்தை வாங்க வந்தவங்க, மொபைல் போனில் கூப்பிட்டும் எடுக்கலையாம்''

''ஆனா, ராத்திரி வீட்டுக்கு வந்தவர், துாக்கு போட்டு தற்கொலை பண்ணிட்டாராம். அவருக்கு நெருக்கமான ஒரு நிர்வாகி தனக்குத்தான் வீட்டை கம்மி விலைக்கு கொடுக்கோணும்னு கொடுத்த அழுத்தத்தால, அவரு தற்கொலை பண்ணிட்டாருன்னு, பேச்சு அடிபடுது,''''சரி.. விடுங்க்கா... மனசாட்சின்னு ஒண்ணு இருக்கல்ல,''
''ஆமாண்டி.. அதையெல்லாம் யாருடி பார்க்கிறாங்க. இந்த ஏ.ஆரிலுள்ள ஒரு சின்ன அதிகாரி, பண்ற 'சின்னத்தனமான' வேலை தெரியுமா?''''ம்... ஹூம்...''''அவர், அங்குள்ள 'லேடி' போலீசாரிடம், 'ஒரு மூணு மணி நேரம் டியூட்டி இருக்கு.. வந்துடுன்னு' 'டபுள் மீனிங்'கில்தான் பேசுவாராம். உடனே, திருப்பி கேட்டா, 'இல்லம்மா... டிராபிக் டியூட்டியை சொன்னேன்னு, ஏதாவது சொல்லி, மழுப்புறாராம். அவருக்கு, ஆமாம் கைத்தடியா இருந்தவரை, 'ஜெனரல்' 'டியூட்டி'க்கு மாத்திட்டாங்க.

இவரையும், எப்படியாவது வேற செக்ஷனக்கு மாத்தோணும்னு, லேடி போலீஸ் ஒண்ணு கூடி பேசுறாங்களாம். ஆனா, பூனைக்கு யாரு மணி கட்டறதுன்ன தெரியாம முழிக்கிறாங்களாம்,''

''சரி... விடுக்கா. இதை பெரிய அதிகாரி பார்த்துப்பாரு,'' என்றாள் மித்ரா.அதற்குள், 'அண்ணாதுரை' கரும்புக்கடை தங்களை வரவேற்கிறது என்ற பேனர் தெரியவே, வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இருவரும் கரும்பு வாங்கி விட்டு, மித்ரா வீட்டுக்கு சென்றனர். பொருட்களுடன் அவள் இறங்கி கொள்ளவே, ''அக்கா... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்,'' என்றாள் மித்ரா.
''தேங்க்ஸ்டி.. எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,'' சொல்லிவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X