ஆயிரம் ரூபாய்க்கு கேசு... | Dinamalar

ஆயிரம் ரூபாய்க்கு கேசு...

Updated : ஜன 15, 2019 | Added : ஜன 15, 2019
Share
தமிழர் திருநாளாம் தைத்திருநாளை வரவேற்க, கோவை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கரும்பு, பூளை பூக்கள், மஞ்சள் கொத்து, பொங்கல் பொருள் வாங்க, மார்க்கெட்டுகளில், கூட்டம் அதிகமாக இருந்தது.நெருக்கடிக்குள் சிக்கித் திணறி, பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வந்த சித்ரா, வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். ஒத்தாசையாக மித்ராவும் இணைந்து கொண்டாள்.''என்னக்கா, ரேஷன் கடையில,
 ஆயிரம் ரூபாய்க்கு கேசு...

தமிழர் திருநாளாம் தைத்திருநாளை வரவேற்க, கோவை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கரும்பு, பூளை பூக்கள், மஞ்சள் கொத்து, பொங்கல் பொருள் வாங்க, மார்க்கெட்டுகளில், கூட்டம் அதிகமாக இருந்தது.நெருக்கடிக்குள் சிக்கித் திணறி, பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வந்த சித்ரா, வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். ஒத்தாசையாக மித்ராவும் இணைந்து கொண்டாள்.

''என்னக்கா, ரேஷன் கடையில, ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்களே; வாங்குனீங்களா...'' என, கொக்கியை போட்டாள், மித்ரா.''அதெப்படி விட முடியும். மூணாவது நாள் கூட்டமில்லாம இருந்துச்சு... கடைக்காரரே போன் செஞ்சு கூப்பிட்டாரு... அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டு வந்துட்டேன்... சொகுசு கார் வச்சிருக்கிறவங்களும் கூட, தொலைவுல நிறுத்திட்டு வந்து வாங்குனாங்க. கடைக்காரரு தப்பா நெனைக்கக்கூடாதுன்னு, 50, 100ன்னு 'டிப்ஸ்' கொடுத்துட்டுப் போனாங்க. இருந்தாலும், நம்ம மாவட்டத்துல, 25 ஆயிரம் கார்டுக்காரங்க வாங்கலையாம்.

''தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக்கோட தந்தையும் வரிசையில நின்னு வாங்கியிருக்காருன்னா, பார்த்துக்கோங்களேன்...'' என்ற சித்ரா, பூஜையறையில் சுவாமி படங்களை துடைத்து, பழைய பேப்பருக்கு பதிலாக புதிதாக மடித்து வைத்தாள்.

அதில், 'லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது' என, செய்தி பிரசுரமாகியிருந்தது.
அதைப்படித்த சித்ரா, ''என்னப்பா, மாநகராட்சி அதிகாரிங்க... வெலவெலத்துப் போயிருக்காங்களாமே...'' என, நோண்டினாள்.
''ஆமாக்கா... லஞ்ச ஒழிப்புத்துறையோட கண்காணிப்பு மாநகராட்சி வட்டாரத்து மேல விழுந்திருக்கு. பெரிய்ய அதிகாரிகள பிடிக்கணும்னு 'பிளான்' பண்றாங்க. யாருமே சிக்க மாட்டேங்கிறாங்க. லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்கவும் ஆள் வச்சிருக்காங்க. ஒவ்வொரு மண்டலத்துல இருந்தும், அத்துறை அதிகாரிகளுக்கு பெரிய தொகை போகுதாம்... 'சவுத் ஜோன்'ல, 'தேசிய பறவை' பேருல ஒருத்தர் இருக்காரு. அவருதான், அங்க 'கிங்'. லஞ்சப்பணம் கை மாறியதும், 'டோர் டெலிவரி' செஞ்சிருவாரு. விஜிலன்ஸ்லயும் ஆள் இருக்குன்னு சொல்றாரு...

ஆளுங்கட்சி முக்கிய புள்ளி இருக்கிற தைரியத்துல, 'ஓவரா' ஆடுறாங்க...''''கொங்கு மண்டலம் ஆளுங்கட்சி கோட்டைன்னு சொன்னாலும்... முக்கியமான பிரச்னை வரும்போது, கோட்டை விட்டுடுறாங்களே...''''ஆயிரம் ரூபாய் கொடுக்கறதுக்கு எதிரா கேஸ் போட்டத சொல்றீங்களா...'

'''ஆமா... மாநிலம் முழுக்க எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்துச்சு... எங்கேயுமே பிரச்னை வரலை. நம்மூர்ல இருந்துதான் கேஸ் போட்டு, பிளக்ஸ் பேனர்கள கழட்ட வச்சாங்க. இப்பவும், நம்மூர்க்காரங்க தானே வழக்கு போட்டு, கவர்மென்ட்டுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. ஆளுங்கட்சிக்காரங்க, ரொம்ப 'வீக்' ஆயிட்டாங்கன்னு நெனைக்கிறேன். உளவுத்துறையும் என்ன பண்ணுதுன்னு தெரியலை...''

''உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தாங்கன்னா; 'பல்ஸ்' பார்த்திருக்கலாம்; தள்ளிப்போட்டுக்கிட்டு வர்றாங்களே...''''வர்ற மே மாசம் நடத்தப் போறதா கோர்ட்டுல சொல்லிருக்காங்ள்ல...''

''அதெல்லாம் வழக்கமா சொல்றதுதானே... பாராளுமன்றத்துக்கும், 20 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துவாங்களா... உள்ளாட்சி தேர்தல் நடத்துவாங்களா...''

''தேர்தல் வரப்போகுதே... இன்னும் வாக்காளர் பட்டியல் வெளியிடலையே...'' என, இழுத்தாள் சித்ரா.''வர்ற, 21ந் தேதி வெளியிடப் போறாங்க. அதுக்கப்புறம்... ஐ.ஏ. எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிங்க 'டிரான்ஸ்பர்' பட்டியல் வெளியாகும்''''தை பிறந்தா,
வழி பிறக்கும்னு சொல்வாங்க. இந்த வருஷம் கோயமுத்துத்துாருக்கு ஒரு வழி பிறக்குதுன்னு சொல்லு...''''நெளிவு சுளிவு இருந்தாலும், துணிவோடு வேலை செய்ற அதிகாரிகள நியமிக்கணும். 'அட்ஜஸ்ட்' பண்ணிட்டு போறவங்கள நியமிச்சா... நம்மூரு 'டெவலப்' ஆகவே ஆகாது,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''கார்ப்பரேஷன்ல 'ஆடிட் அப்ஜெக்ஷன்' வந்துருக்காமே...''
''சுகாதாரத்துறையில ஜோனல் லெவல் ெஹல்த் ஆபீசர் போஸ்டிங், ஜெ., உயிரோட இருந்தப்ப உத்தரவு கொடுத்தாங்க. அவுங்களுக்கு அரசு உத்தரவுப்படி சம்பளம் கொடுக்குறாங்க. ஆனா, 'போஸ்டிங்' கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க. 'ஆடிட் அப்ஜெக்ஷன்' வந்ததும், 'ஜோன்' பொறுப்பு கொடுத்ததா ஒரு உத்தரவு போட்டு, மாற்றுப்பணின்னு வார்டு வேலை ஒதுக்கி இருக்காங்க. அரசாங்க உத்தரவ அமல்படுத்துறதுக்கும், 'கரன்சி' எதிர்பார்க்குறாங்க...''வீட்டை சுத்தம் செய்து குப்பையை அள்ளிய சித்ரா, ''நம்ம வீட்டிலேயே இவ்ளோ பிளாஸ்டிக் இருக்கே... இப்ப பிளாஸ்டிக் ஒழிப்பு எந்த லெவல்ல இருக்கு...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''மக்கள்ட்ட நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கு. இருந்தாலும், சுகாதாரத்துறை அதிகாரிகள்ட்ட வேகமில்ல... தெனமும் ஒரு ஏரியால 'ரெய்டு' போனாங்கன்னா... நகரமே சுத்தமாயிடும்...''''ரெய்டு போகலாம்; சில பேரு, வசூல்ல கொடி கட்டி பறக்குறாங்களாமே...''''ஆமாக்கா... முதல்ல... அஞ்சாயிரம் ரூபா அபராதம் போடப்போறதா மிரட்டுறாங்க... அப்புறம் ரெண்டாயிரம்... கடைசியா, ஐநுாறு ரூபாதான் 'பைன்' போடுறாங்க. கணக்குல வராம, பல 'ல'கரத்தை அமுக்க ஆரம்பிச்சிட்டாங்க...''

''இப்ப, அதிகாரிங்க மட்டுமில்ல... கட்சிக்காரங்களும் கூட்டுக்கொள்ளை அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க...''''அப்படியா...''''ஆமாப்பா, ஜாகீர்நாயக்கன்பாளையத்துல இருக்கற ஆளுங்கட்சிக்காரரும், காளிமங்கலத்தைச் சேர்ந்த தி.மு.க.,காரரும், கிராவல் மண் கடத்துறதுல கில்லாடி. டி.ஆர். ஓ., ஆய்வு செஞ்சி, மண் மாதிரி எடுத்துட்டு போயிருக்காரு. ஆளுங்கட்சிக்காரரு, ஒவ்வொரு வருஷமும் சேவல் சண்டை நடத்துறது வழக்கமாம். இந்த வருஷமும் நடத்துறதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காராம்...''
''அதெல்லாம் சரி... கல்வித்துறையில சம்பள பில் செக்ஷன்ல... வசூல் களைகட்டுதாமே...'' என்றாள் மித்ரா.''ஆமாம்மாம்... ஒவ்வொரு வாத்தியாரும், 50 ரூபா... மொய் எழுதணுங்கிறது... எழுதப்படாத சட்டம்...''''அம்பது ரூபா கொடுக்குறதெல்லாம்... ஒரு பிரச்னையா...?''''என்னப்பா... இப்படி கேட்டுட்டே... ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியருங்க வேலை பார்க்குறாங்க. ஒருத்தரு அம்பது ரூபா கொடுத்தா, ரெண்டரை லட்சம் ஆச்சு. இதுமாதிரி, 'அரியர்', 'லீவு சரண்டர்'ன்னு எந்த 'பில்' கொடுத்தாலும், கப்பம் கட்டணும். இது, எஜூகேஷன் டிப்பார்ட்மென்ட்டுக்கு; 'டிரசரி'க்கும் தனி கணக்கு இருக்கு...''''நீதிமன்ற படியேறுனவங்களையும் சில பேரு மிரட்டுறாங்க...''''அப்படியா... யாரு மிரட்டுறது... போலீஸ்காரங்களா...''''ஆமாக்கா... பைனான்ஸ் மோசடி, ஈமு கோழி மோசடி வழக்கு 'டான்பிட்' கோர்ட்ல நடக்குது. 'அக்கியூஸ்ட்' தரப்ப காப்பாத்தறதுக்காக, 'செட்டில்மென்ட்' ங்கற பேருல, இ.ஓ.டபுள்யூ., போலீஸ்காரங்க கட்டப்பஞ்சாயத்து செய்றாங்க. டெபாசிட் பண்ண தொகையில, 30 சதவீதத்தை வாங்கி கொடுத்துட்டு, முழுத்தொகையும் வாங்கிட்டதா, கோர்ட் வாசல்ல வச்சே மிரட்டி கையெழுத்து வாங்குறாங்களாம். ஒரு பார்ட்டிக்கு இவ்வளவுன்னு கணக்கு போட்டு, 'அக்கியூஸ்ட்' தரப்புல இருந்து கமிஷன் வாங்கிக்கிறாங்களாம். கெடைச்சத வாங்கிட்டுப் போங்க, இல்லேன்னா இதுவும் கெடைக்காம போயிடும்னு மிரட்டுறதுனால, வேற வழியில்லாம கையெழுத்து போடுறாங்களாம்...''''ஆளுங்கட்சிக்குள்ள முட்டல் மோதல் ஏற்பட்டிருக்காமே...''''அதுவா... ஓ.பி.எஸ்., அணிக்கு போனாரே... அவருக்கு கட்சில முக்கிய பொறுப்பு கொடுத்திருந்தாலும், கொஞ்ச நாளா... எந்த நிகழ்ச்சிக்கும் வர்றது இல்ல... எதிரணி கூடாரத்துக்கு போகப்போறதா 'டாக்' ஓடிக்கிட்டு இருக்கு. நம்மூர் வி.ஐ.பி.,யோட மனசாட்சியா இருக்கிறவரு... ஒதுங்கி இருக்கறது மர்மமா இருக்கு...'' என்றாள் மித்ரா.பேசிக்கொண்டே களைப்பு தெரியாமல், வீடு முழுவதையும் சுத்தம் செய்து முடித்திருந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X