சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய கூட்டம்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

Added : ஜன 15, 2019 | கருத்துகள் (22)
Advertisement
பிரதமர் மோடி, காங்கிரஸ், மல்லிகார்ஜூனா கார்கே,

புதுடில்லி: சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய, உயர் மட்ட குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.


ராஜினாமா


சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இரண்டு பேரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வர்மாவை சிபிஐ இயக்குநராக நியமித்தது. மேலும், அவர் கொள்கை முடிவு எதையும் எடுக்கக்கூடாது. அவரது பதவி குறித்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய உயர் மட்ட குழு கூடி முடிவெடுக்க உத்தரவிட்டது. பின்னர், கடந்த 10ம் தேதி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி சிக்ரி ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்த அலோக் வர்மா, தீயணைப்பு துறை இயக்குநராக மாற்றப்பட்டார். இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கபட்டார். தனது பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார்.


அறிக்கை வேண்டும்


இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திரமான தலைவரின் கீழ் சிபிஐ இயங்குவதை கண்டு பயப்படுவது போல், அரசின் செயல்பாடுகள் உள்ளன. இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம். புதிய தலைவரை நியமிக்க, உயர்மட்ட குழு கூட்டத்தை உடனடியாக பிரதமர் கூட்ட வேண்டும். அலோக் வர்மா குறித்த சிவிசி அறிக்கை, நீதிபதி பட்நாயக் அறிக்கை, கடந்த 10ம் தேதி நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-201900:01:54 IST Report Abuse
Ganesan Madurai ராஜீவ் மேடையில் அனைவர் முன்பும் வெங்கடேஸ்வரனை அவமானப்படுத்தி வெளியேற்றியதை இந்த கார்கே மறைத்து கான்கிரஸ் எப்போதும் அதிகாரிகளை மதித்ததுபோல நடிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
16-ஜன-201900:01:33 IST Report Abuse
Ganesan Madurai ராஜீவ் மேடையில் அனைவர் முன்பும் வெங்கடேஸ்வரனை அவமானப்படுத்தி வெளியேற்றியதை இந்த கார்கே மறைத்து கான்கிரஸ் எப்போதும் அதிகாரிகளை மதித்ததுபோல நடிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
16-ஜன-201900:01:31 IST Report Abuse
Ganesan Madurai ராஜீவ் மேடையில் அனைவர் முன்பும் வெங்கடேஸ்வரனை அவமானப்படுத்தி வெளியேற்றியதை இந்த கார்கே மறைத்து கான்கிரஸ் எப்போதும் அதிகாரிகளை மதித்ததுபோல நடிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X