இந்தியாவிற்கு உறுதியான பிரதமர் தேவை: ஜெட்லி

Added : ஜன 15, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
Arun Jaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ

புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர நாட்டிற்கு உறுதியான பிரதமர் தேவை என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையில் நாடு, வேகமான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறி உள்ளது. இருப்பினும், ஜிடிபி வளர்ச்சியை 8 சதவீதத்தை தாண்ட வேண்டும் என விரும்புகிறோம். இதனை தொடர வேண்டுமானால், யார் இந்தியாவின் பிரதமராக தொடர வேண்டும்? கூட்டணி கட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் நபர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமா? அல்லது 2014 ல் தெளிவான தீர்ப்பு மூலம் கிடைத்த பிரதமர் போன்றவர் வேண்டுமா? தெளிவான தீர்ப்பு மூலம் கிடைக்கும் பிரதமர் தான், இந்தியாவின் நம்பிக்கையையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்தமுடியும்.

மோடி ஆட்சியில், ஆண்டிற்கு சராசரியாக 7.3 சதவீத வளர்ச்சி கிடைத்தது. இது முந்தைய ஆட்சியை காட்டிலும் அதிகம். கடந்த ஆட்சிகளை விட தற்போது தான் நிதி பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார் .


அமெரிக்கா பயணம்

கடந்த ஆண்டு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக நடக்கும் பரிசோதனைக்காக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
18-ஜன-201917:58:02 IST Report Abuse
Ramaswami Sampath உன்னாலே பட்டது போதும் .வீட்டுக்கு போ
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
16-ஜன-201904:34:30 IST Report Abuse
blocked user PC மற்றும் BC ஐ பாதுகாக்காத நிதி மந்திரி தேவை...
Rate this:
Cancel
16-ஜன-201904:27:16 IST Report Abuse
ஆப்பு இங்கே இருக்குறவங்களுக்கு ஒண்ணரை ரூவாயில ஆயுஷ்மான்...இவிங்க மட்டும் சிகிச்சைக்கு அமெரிக்கா பறந்துருவாங்க. அதுவும் சொல்லாம கொள்ளாம... ஆமா நம்ன எய்ம்ஸ் டாக்டருங்க என்ன இவருக்கு வைத்தியம் பாக்க தெரியாதவங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X