சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல் அவமானத்திற்குரியது: பிரதமர் மோடி

Updated : ஜன 15, 2019 | Added : ஜன 15, 2019 | கருத்துகள் (40)
Share
Advertisement
திருவனந்தபுரம்: 'சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது; அவர்களை வரலாறு மன்னிக்காது' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.வேகமான வளர்ச்சி கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது: 4 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் எளிதாக தொழில் துவங்குவது குறித்து யாரேனும் சிந்தித்து உள்ளனரா.
பிரதமர் மோடி, கேரளா, இடதுசாரிகள், கம்யூனிஸ்ட்கள், கலாசாரம், காங்கிரஸ், சபரிமலை

திருவனந்தபுரம்: 'சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது; அவர்களை வரலாறு மன்னிக்காது' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


வேகமான வளர்ச்சி


கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது: 4 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் எளிதாக தொழில் துவங்குவது குறித்து யாரேனும் சிந்தித்து உள்ளனரா. கொள்கை உருவாக்குபவர்களின் அகராதியில் இந்த வார்த்தையே இருந்திருக்காது. கடந்த 4 ஆண்டில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் 142வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். உலகிலேயே வேகமான வளர்ச்சி இதுவாகும்.


மக்களுக்கு ஆதரவு


சபரிமலை விவகாரத்தில், இடதுசாரிகளின் நடவடிக்கையானது, வரலாற்றில், மோசமான அரசு அல்லது கட்சிகளின் செயல்பாட்டை காட்டிலும் மோசமானது. இடதுசாரிகள் இந்திய கலாசாரம், பண்பாடு, ஆன்மீகத்தை மதிக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தளவு வெறுப்பு வைத்திருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரசும் சிறந்தது அல்ல. காங்கிரஸ் பல நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. பார்லிமென்டில் ஒன்றை கூறுவார்கள். பத்தனம்திட்டாவில் வேறொன்றை கூறுவார்கள். அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. அக்கட்சியால், தங்களது நிலைப்பாடு குறித்து தெளிவாக விளக்க முடியுமா?


ஒரே நாணயம்


ஆனால், எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எங்களின் நடவடிக்கைகளும், வார்த்தைகளும் ஒன்றி போகும். மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கு பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால், இளைஞர்களின் சக்தி, ஏழைகளை புறக்கணிப்பது, மக்களை ஏமாற்றுவதில் ஒன்றுதான். இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் தான். பெயரில் வேறுபாடு இருந்தாலும், ஊழல், ஜாதி மற்றும் மதவாதத்தில் ஒன்றுதான். கேரள கலாசாரத்தை சீர்குலைப்பதிலும், அரசியல் வன்முறையிலும் ஒன்றாக தான் உள்ளது.
சமவாய்ப்பு


பாலினம் மற்றும் சமூக நீதி குறித்து உயர்ந்த வாக்குறுதிகளை இடதுசாரிகள் கொடுப்பார்கள். ஆனால், அவர்களின் செயல்பாடு அதற்கு மாறாக இருக்கும் முத்தலாக் முறையை ஒழிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. இதனை கம்யூனிஸ்ட்களும், காங்கிரசும் தான் எதிர்க்கின்றனர். பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கும் மசோதாவை மத்திய அரசுநிறைவேற்றியது. ஒவ்வொரு இந்தியனுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramanathan - Ramanathapuram,இந்தியா
18-ஜன-201908:08:40 IST Report Abuse
ramanathan //கடந்த 4 ஆண்டில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் 142வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். உலகிலேயே வேகமான வளர்ச்சி இதுவாகும்.//இந்தியாவின் தங்க மகன் பிரதமர் மோடி. நாட்டுக்காக உழைக்கும் உத்தமர் மோடி.
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
16-ஜன-201912:49:35 IST Report Abuse
narayanan iyer இன்று நீதிமன்றங்கள் அனைத்தும் மத்திய மாநில அரசுகளுடன் இணக்கமாக இல்லை . காரணம் நாமே சகல அதிகாரம் படைத்தவர்கள் என்ற ஒரு இறுமாப்பு எண்ணம் கொண்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் . இது நல்லதல்ல . அரசுகள் வெறுமனே மக்களை முன்னேற்றுகிறோம் என்று குறைந்த மதிப்பெண் பெற்ற சில சமுதாயத்தினரை கொண்டுவந்து விட்டன ஓட்டின் ஆசையால் . அதன் விளைவு இன்று நடக்கிறது .
Rate this:
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-201905:51:47 IST Report Abuse
Ivan Arumai
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X