பொது செய்தி

இந்தியா

கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு அமல்

Updated : ஜன 15, 2019 | Added : ஜன 15, 2019 | கருத்துகள் (8)
Advertisement
கல்வி நிறுவனங்கள்,10% இட ஒதுக்கீடு,அமல்

புதுடில்லி : 2019 கல்வி ஆண்டு முதல், அனைத்து கல்வி நிலையங்களிலும், 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில், பார்லிமென்டில் நிறைவேறியது. நீண்ட விவாதத்திற்குப்பிறகு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், இந்த மசோதா, பெரும்பாலானோர் ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதனால், இந்த மசோதா, சட்டமானது. ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளோர், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் உள்ளோர், நகர்ப்பகுதியில், 900 சதுர அடிக்கு குறைவான வீடு உள்ளோர், இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தகுதி உடையோராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் 2019 கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
15-ஜன-201923:34:58 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) நன்றி பிஜேபி. கடன் வாங்கி படித்த ஏழை பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தான் அந்த வலி தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
ravisankar K - chennai,இந்தியா
15-ஜன-201922:36:59 IST Report Abuse
ravisankar K இதை பற்றி சமூகநீதி திராவிட கட்சிகளின் கருத்து என்னவோ ??... தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் போது தன் மானம் , இன மானம் காணாமல் போகுமா ??.... தன் மான சிங்கமான தமிழனுக்கு இது ஒரு அவமானம் இல்லையா ??..
Rate this:
Share this comment
Cancel
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
15-ஜன-201921:44:30 IST Report Abuse
srideesha இந்த ஆணை தமிழகத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்துமா அல்லது மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தானா?
Rate this:
Share this comment
raghavan - Srirangam, Trichy,இந்தியா
16-ஜன-201900:51:01 IST Report Abuse
raghavanThe quota law will be applicable to all higher education institutions - whether private or government, it will be implemented in the 40,000 colleges and around 900 universities in the country....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X