பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வேகம்!
'எலக்ட்ரிக்' ஸ்கூட்டர் விற்பனை அதிகரிப்பு
செலவு குறைவால் வாங்குவதற்கு ஆர்வம்

புதுடில்லி: மின்சாரத்தில் இயங்கும் 'எலக்ட்ரிக்' வாகனங்கள் விற்பனைக்கு மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை எட்டும் வகையில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மாறாக நான்கு சக்கர, 'எலக்ட்ரிக்' வாகனங்கள் விற்பனை மந்த நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்,விற்பனை,அதிகரிப்பு,செலவு குறைவு,வாங்குவதற்கு ஆர்வம்மத்திய அரசின் செலவினங்களில், கச்சா எண்ணெய்க்கு முக்கிய பங்கு உள்ளது. கோடிக்கணக்கான வாகனங்கள் பெருக்கத்தால், கச்சா எண்ணெய் வாங்குவதற்காக, பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவழித்து வருகிறது. இதை குறைக்கும் நோக்கில், எலக்ட்ரிக் வாகனங்கள் புழக்கத்தை, மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு விரும்புகிறது.


எலக்ட்ரிக் வகை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை, தற்போது, மொத்த வாகனங்களில், 1 சதவீதமாக உள்ளது. இதை, 2030க்குள், 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை, எலக்ட்ரிக் வகை வாகனங்களாக தயாரிப்பது குறித்து, தெளிவான கொள்கையை மத்திய அரசு வகுக்கவில்லை. இதனால், கார் தயாரிப்பாளர்கள், எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.


எலக்ட்ரிக் கார்களை, வெளியிடங்களில், 'சார்ஜ்' செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள், போதிய

அளவில் ஏற்படுத்தப்படவில்லை. மேலும், எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்படும் பேட்டரிகளின் விலை, மிக அதிகமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால், எலக்ட்ரிக் கார் விற்பனை படு மந்தமாக உள்ளது. இதனால், மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை, இந்த கார்களால் எட்ட முடியவில்லை.


மாறாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில், மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய, 'ஸ்டார்ட்அப்' நிறுவனமான, ஒகினாவா தயாரித்துள்ள, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், பேட்டரியை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால், 100 - 120 கி.மீ., துாரம் செல்ல முடிகிறது. இந்த துாரத்தை கடக்க, பெட்ரோல் ஊற்றுவதானால், 150 ரூபாய் செலவிட வேண்டி இருக்கும்; எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் செல்ல, மின்சாரத்திற்கு, 15 ரூபாய் செலவழித்தால் போதும்.


எனவே, பலர், ஸ்கூட்டர் பக்கம் கவனத்தை திருப்ப துவங்கி உள்ளனர். இந்த ஸ்கூட்டர், சாதாரணமாக, 75 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. 'பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துவதால், இந்த தொகையை, 2 - 3 ஆண்டுகளில் எடுத்து விட முடியும்' என, ஸ்கூட்டர் பயனாளர்கள் கூறுகின்றனர் .எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை கணிசமாக அதிகரித்து வருவதால் மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை எளிதில் எட்டி விட முடியும் என கூறப்படுகிறது.


இரு மடங்கு விற்பனை:ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் பைக் விற்பனைக்கு, உலகின் மிகப்பெரும் சந்தையாக, இந்தியா திகழ்கிறது. 2018, மார்ச், 31 உடன் முடிந்த நிதியாண்டில் மட்டும், 1.9 கோடி ஸ்கூட்டர், மோட்டார் பைக்குகள் விற்பனை ஆகியுள்ளன. இதே காலத்தில், இதில், ஆறில் ஒரு பங்கு கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.


Advertisement

இந்தியாவுக்கு அடுத்தபடியாக, உலகளவில், ஸ்கூட்டர், மோட்டார் பைக் விற்பனையில், சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு, 2017ம் ஆண்டில், 1.7 கோடி ஸ்கூட்டர், மோட்டார் பைக் விற்பனை ஆகியுள்ளன. மொத்த விற்பனையில் மிக குறைவான எண்ணிக்கையில், தற்போது, எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மோட்டார் பைக்குகள் விற்பனை ஆகின்றன.


இருப்பினும், முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2017 - 18 நிதியாண்டில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை, இரு மடங்காக உயர்ந்துள்ளது. மாறாக, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2017 - 18ல், 'எலக்ட்ரிக்' கார் விற்பனை, 2,000ல் இருந்து, 1,200 ஆக குறைந்துள்ளது.

விரைவில், 'சார்ஜ்' ஆகும்

'எலக்ட்ரிக்' ஸ்கூட்டர்கள் எலக்ட்ரிக் கார்களை ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கார்களை விட, ஸ்கூட்டர்களில் சிறியளவிலான பேட்டரிகள் பொருத்தப்படுகின்றன. இதனால், குறைந்த மின்சாரம் செலவாகிறது; விரைவில், சார்ஜ் ஆகி விடுகிறது. மேலும், பேட்டரியின் விலையும், குறைவாக உள்ளது. அதேசமயம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பெட்ரோலில் ஓடும் ஸ்கூட்டர்களை போல் திறன் வாய்ந்ததாக இல்லை. அதனால், பெட்ரோல் ஸ்கூட்டரை ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேகம் குறைவு. பழுது ஏற்பட்டால், அதன் பாகங்களை பெற, இறக்குமதியாளரை நம்பி இருக்க வேண்டி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
16-ஜன-201919:39:25 IST Report Abuse

jaganஒகினாவா வெப்சைட் படி, இதன் பேட்டரி தனியாக எடுக்க முடியும். மேலும் 78 % இந்தியர்கள், ஒருநாளுக்கு 60 கீ மிக்கு குறைவாகவே ஓட்டுகிறார்கள். எனவே , பேட்டரியை வீட்டிற்கு எடுத்து சென்று சார்ஜெரில் இரவு போட்டால், காலை ரெடி..

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-201917:28:16 IST Report Abuse

தமிழ்வேல் மேக் இன் இந்தியா என்னவானது ? இது கூட நம்மால் தயாரிக்க இயலாதா ?

Rate this:
jagan - Chennai,இந்தியா
16-ஜன-201919:29:08 IST Report Abuse

jaganநமது இட ஒதுக்கீடு பொரியல் (சாப்பிட மற்றும் லஞ்சம் வாங்க மட்டும் தெரிந்த ) வல்லூறுகளால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது... ...

Rate this:
Manian - Chennai,இந்தியா
17-ஜன-201908:12:04 IST Report Abuse

Manianதமிழ் வேல், இந்த பெட்டியை தயாரிக்கும் காப்புரிமை, அது பற்றிய தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லை. மேலும் அதை கற்பிக்கும் திறமையை உள்ளவர்களும் இல்லை. நபர் ஒருவர் சூன்- எங்கும் தெரிந்த பாட்டரி ரசாயனத்தில் முனைவர் படடம் பெற்றவர் ஒருவர் இரூக்கிறார். அனால் 40 % கட்டிங், காப்புரிமை பெறுவதில் உள்ள சங்கடங்கள், அப்படியே காப்புரிமை பெறலாம் அதை திருடி விற்கும் இந்தியர்கள், நீண்ட நேரம் ஒவ்வொரு நாளும் மனைவி மக்களை விட்டு ஆராச்சி செய்வது இதில்லாம் எதுக்கு என்று ஒதுங்கி விடடேன் என்றாராம் . ஜாதிய ஒதுக்கீட்டில் குதித்தவர்கள் எல்லாம் தற்போது திறமையானவர்கள் மேல் நாடுகளுக்கு ஓடி போய் விடடார்களே என்று துன்பப்படுவது ஒன்று தான் வழி. "கற்றாருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு" என்று நமது சொலவடையை மறந்ததால் வந்த வினை. இதை செய்பவர்கள் இங்கே வர மாட்டாரக்ள். மோடியின் மேக் இந்தியா இருப்பதைத்தான் விரிவாக்கம் செய்ய முடியுமே தவிர, காப்புரிமை பெரும் புதிய தொழில்களை கொண்டுவராது. ஆராச்சிக்கு மதிப்பு கூடினால் மட்டுமே அது வரும். அதை எப்படி செய்வது? ...

Rate this:
Manian - Chennai,இந்தியா
18-ஜன-201904:16:54 IST Report Abuse

Manianமேலும் இந்த பேட்டரி தாயாரிக்க "லித்தியம்" என்ற ரசாயனம் தேவை. அது சில தென் அமெரிக்கா, சைனாவில், சில ஆப்ரிக்கா நாடுகளிலும் மட்டும் கிடைக்கிறது. அதை அமெரிக்காவும், சைனாவும் ஏற்கனவே பிடித்து வைத்துள்ளார்கள். 1. ஆஸ்திரேலியா (13,000 மெட்ரிக் டன்), 2. சிலி (12,900 ) ,3. சீனா(5,000 ) , 4. ஆர்ஜென்டின ( 2,900), 5. ஜிம்பாப்வே (1,000 ) ,6. போர்ச்சுகல்(570), 7. பிரேசில் (400 ). பெட்ரோலியத்திற்கு அரபு நாடுகளை(பொதுவாக) சார்ந்திருக்கிறோம். அதுபோலவே லித்தியம் நமக்கு கிடைக்காது. ஏன் என்றால், தோலை நோக்கு பார்வை உள்ள எவருமே நாம் அரசாங்கத்தில் 'வருமுன் காப்போனாக " இல்லை. எந்த ஆராய்ச்சியும் இல்லை. மென் பொருள் துறையில், அதிர்ஷ்ட வசமா, அரசியல் வியாதிகள் முழித்துக் கொள்ளும் முன் உற்பத்தி ஏற்பாட்டால் அதில் முன்னேறி இருக்கிறோம். ஆனால், கம்பியூட்டருக்கு இந்திய மின் வன் பொருள்- தாய் பலகை -Mother board- இன்னும் உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லை. வான்வெளியில், திரு கலாம் போன்றவர்களால் முன்னுக்கு வந்துவிட்டொம். ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-201916:43:42 IST Report Abuse

Endrum Indianஇதில் உள்ள ஒரே கெடுபிடி சமாச்சாரம் சார்ஜிங் தான். மற்றபடி குறைந்த வேகம் எல்லாம் சரிதான். அயல்நாடுகள் போல சார்ஜிங் ஸ்டேஷன் இந்தியாவில் இல்லை, பெரிய காம்ப்ளெக்சில் இருப்பவர்களுக்கு தொல்லை இந்த சார்ஜிங். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. அதிக பட்சம் இது வரை 100 கி.மீ. தூரம் ஒரு புல் சார்ஜில் செல்லும். ஒரு நாளைக்கு 20 கி.மீ. மட்டுமே ஓட்டினால் அட்லீஸ்ட் 5 நாட்கள் வரும், அதிகம் என்றால் தினம் தினம் சார்ஜ் என்பது தனி வீடு, பங்களாவில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் சுலபமான காரியம். அயல்நாட்டில் இதற்கு மவுசு அதிகம் வீடு தனியானது, அங்கு அங்கு சார்ஜிங் ஸ்டேஷன் (பெட்ரோல் பங்கு போல) கூட உண்டு. இங்கு அந்த நடைமுறை வர பல வருடங்கள் எடுக்கும், மக்கள் ஜனத்தொகை இங்கு பிதுங்குகின்றது அயல்நாட்டில் அவ்வளவு ஜனத்தொகை நெருக்கம் இல்லவே இல்லை.

Rate this:
jagan - Chennai,இந்தியா
16-ஜன-201919:33:40 IST Report Abuse

jaganஒகினாவா ஸ்கூட்டர், பேட்டரியை நீங்க கையில் எது செண்டு வீட்டில் சார்ஜ் செய்யலாம்....இந்தியாவில் 78 % மக்கள் 60 கீமிக்கு குறைவாகவே ஒரு நாளில் ஓட்டுகிறார்கள்....இரவு சார்ஜ் போட்டால் போதும்... வெப்சைட் போய் படியுங்கள்... ...

Rate this:
Manian - Chennai,இந்தியா
17-ஜன-201908:21:56 IST Report Abuse

Manianஎன்றும் இந்தியன்- முதலில் இது அறிமுகம் ஆகும். அதன் பின் சூரிய ஒளியில் (solar cell) பிரயாணம் செய்யும் ஸ்கூட்டர் மேல் கூரையில் குடை வைத்து, அதிலிருந்துவரும் மின்சாரம் பாட்டரியை சார்ஜ் செய்யும். மேலும் பிரேக் போடும் போது பிரேக் தற்போது மின்சார பாட்டிரி கார்களில் செய்வது போல் சார்ஜ் செய்யும். பாட்டரியை ஆபிசில் எடுத்து சென்று சார்ஜ் செய்யலாம். அதெல்லாம் மொதல் நாளே வராது,. கலியாணம் ஆனா ஒடனே புள்ளை பொறந்ததது -கடோதகஜன்- மாகாபாரத்தில் மட்டுமே உண்டு. ...

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X