'உ.பி., தான் பிரதமரை தேர்வு செய்யும்'; பிறந்த நாள் பரிசு கேட்கிறார் மாயாவதி Dinamalar
பதிவு செய்த நாள் :
'உ.பி., தான் பிரதமரை தேர்வு செய்யும்'
பிறந்த நாள் பரிசு கேட்கிறார் மாயாவதி

லக்னோ: ''நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை, உத்தர பிரதேசம் தான் முடிவு செய்யும். அதனால், இந்தத் தேர்தலில் முந்தைய வேறுபாடுகளை மறந்து, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். இதுதான், எனக்கு தரும் சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்கும்,'' என, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, கூறினார்.

உ.பி., பிரதமரை,தேர்வு செய்யும்,பிறந்த நாள்,பரிசு,கேட்கிறார்,மாயாவதி


நாட்டிலேயே, மிகவும் அதிகபட்சமாக, 80 லோக்சபா தொகுதிகளை உடைய உத்தர பிரதேச மாநிலத்தில், அதிக தொகுதிகளில் வெல்வதற்கு, கட்சிகள் முயற்சித்து வருகின்றன.முன்னாள் முதல்வர்களான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டுள்ளன.

இந்நிலையில், தன், 63வது பிறந்த நாளை, லக்னோவில், மாயாவதி, நேற்று கொண்டாடினர். கட்சி நிர்வாகிகள் இடையே அவர் பேசியதாவது:வரும் லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், மிகவும் முக்கிய பங்கை வகிக்க உள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை, உ.பி.,தான் தீர்மானிக்கும். ஏற்கனவே இருந்த கட்சி வேறுபாடுகளை மறந்து, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

நம் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றியை, கட்சித் தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். இதுதான், எனக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்கும். விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரத்தில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசுகளுக்கு எதிராக கேள்விகள் எழத் துவங்கிவிட்டன. இதுவரை அறிவித்த, கடன் தள்ளுபடியை முறையாக நிறைவேற்றவில்லை.

இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான, கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. அனைத்து விவசாயக் கடன்களையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதற்கிடையே, மாயாவதியை நேரில் சந்தித்து, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் கிண்டல்!

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ஆர்.பி.என். சிங், கூறியதாவது: அரசியல் ரீதியில், உத்தர பிரதேசம் மிகவும் முக்கியமான மாநிலம். இங்கு, மதச் சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பது, பா.ஜ.,வுக்கு தெரியும். அதனால் தான், மதச் சார்பற்ற மெகா கூட்டணி அமைந்து விடக் கூடாது என்பதில், பா.ஜ., தீவிரமாக இருந்தது. தற்போது காங்கிரஸ் இல்லாமல், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்துவிடும். இதைத் தான் அவர்கள் விரும்பினர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201919:26:10 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிகனவு காணும் திருடனும் திருடியும்...

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
16-ஜன-201918:18:56 IST Report Abuse

வல்வில் ஓரிஅதெல்லாம் கெடக்கட்டும்..ஒங்க ரெண்டு மூஞ்சியையும் ஊ பி தேர்வு செய்யணும் ல ? அதுக்குள்ளே...?

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
16-ஜன-201915:55:26 IST Report Abuse

siriyaarஎப்படியோ ராகுல் இந்த முறை 80 தொகுதி ஜெயிச்சு எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிடுவார். மக்கள் இந்தமாதிரி கூட்டணி கண்டு காண்டாகி மோடியை தேர்ந்தெடுப்பார்கள்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X