பதிவு செய்த நாள் :
பாரம்பரியம் மறந்த அரசுகள்
பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பலாங்கிர்: ''முந்தைய அரசுகள், நம் நாட்டின் செழுமையான பாரம்பரியத்தை அலட்சியம் செய்து, சுல்தான்களின் ஆட்சியை போல் செயல்பட்டன,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசாவில் உள்ள, பலாங்கிர் நகரில் நேற்று நடந்த, பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த கால அரசுகள், நம் நாட்டின் செழுமையான பாரம்பரியத்தை அலட்சியம் செய்தன; சுல்தான்களின் ஆட்சியை போல், அவை செயல்பட்டன. நம் நாட்டின் உயர்ந்த நாகரிகத்தை பேணி பாதுகாக்க, அவை தவறி விட்டன.

இந்தியாவின் பழமையான சொத்து, யோகா என்பதை மறந்து, சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.நம் நாட்டுக்கு சொந்தமான, பழமையான சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன.

அவற்றை மீண்டும் நம் நாட்டுக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பாரம்பரியம்,மறந்த அரசுகள்,பிரதமர்,மோடி,குற்றச்சாட்டு


ஒடிசாவில் நேற்று, 1,550 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது, ''ஒடிசா மாநில வளர்ச்சியை அதிகரிப்பதற்கான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும்,'' என, அவர் கூறினார்.

Advertisement

மோடியை தவிர்த்த நவீன்:

நாட்டின் பிரதமர், அரசு பயணமாக, ஒரு மாநிலத்துக்கு வருகை தந்தால், அவரது நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அந்த மாநிலத்தின் முதல்வர் செல்வது மரபு. அதேசமயம், சொந்த காரணங்களுக்காக, பிரதமர் வந்தால், அவருடன், முதல்வர் செல்ல வேண்டியது இல்லை. இந்நிலையில், அரசு பயணமாக, ஒடிசாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி வந்தபோது, அவருடன், ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக் செல்லாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mithun - Bengaluru,இந்தியா
17-ஜன-201900:04:55 IST Report Abuse

Mithunஇங்கே கருத்து கூறும் கிருஸ்துவ, இஸ்லாமிய சகோதரர்களுக்கும். அவர்களுக்கு கூஜா தூக்கும் வீரமணி குழுவுக்கும். கூறிக்கொள்வது என்னவென்றால், இந்த உலகில் பல நாடுகள் இஸ்லாத்தையும், கிருஸ்துவத்தையும் பேணி காத்து வளர்த்து வருகின்றன. அனால் ஹிந்துக்களுக்கு என்று ஒரே நாடு அது இந்தியா தான். நாங்கள் எங்கள் மதத்தை வளர்க்க விரும்பவில்லை, வாழ விரும்புகிறோம். தயவுசெய்து எங்களை வாழவிடுங்கள். மோடிஜி நான் ஒரு ஹிந்து என்று சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை தூற்றுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
16-ஜன-201920:07:32 IST Report Abuse

ரத்தினம்தேசத்துக்காக உழைப்பவர்கள் ஏமாற்றுக்காரர்களாக தெரிவார்கள்.

Rate this:
16-ஜன-201918:41:27 IST Report Abuse

VIJAIAN Conly Congress and DMK follow parampariamnehru,Indra,sanjiv,rajiv,Sonia,Rahul, Priyankain our state kalaigar,Stalin,udhyanidhi,kanimozhi!!!!

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X