பொது செய்தி

இந்தியா

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா விஞ்சும்

Updated : ஜன 16, 2019 | Added : ஜன 16, 2019 | கருத்துகள் (20)
Advertisement
பொருளாதார வளர்ச்சி,அமெரிக்கா,இந்தியா,விஞ்சும்,2030,உலகளவில் ,இரண்டாவது இடத்தை,பிடிக்கும்

புதுடில்லி: அடுத்த பத்தாண்டுகளில், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் ஆய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அன்னியச் செலாவணி விகிதாச்சார அடிப்படையில், வளரும் நாடுகளின் வாங்கும் சக்தி மற்றும் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலவரப்படி தயாரிக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வளரும் நாடுகளைச் சேர்ந்த, ஏழு நாடுகள், 2030ல், உலகின் 'டாப் 10' பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம் பெறும்.


சீர்திருத்தம்:

இந்தியா, பல்வேறு சீர்திருத்தங்களை தீவிரமாக மேற்கொண்டு வருவதால், அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காணும். ஜி.எஸ்.டி., அறிமுகம், திவால் சட்ட அமலாக்கம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக, முதலீடுகள் அதிகரிக்கும். வரும், 2020ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உ ற்பத்தி, 7.8 சதவீதமாக வளர்ச்சி காணும். இது, நடப்பு ஆண்டில், 7.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை விட, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருக்கும். எனினும், அடுத்த பத்தாண்டுகளில், இவ்வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருக்கும். சீனாவின் மக்கள் தொகை அடிப்படையிலான தேவைப்பாடும், அதற்கேற்ப உற்பத்தி விகிதமும் அதிகம். அதனால், 2020களின் துவக்கத்தில், சீனா, உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக, அமெரிக்காவை விஞ்சி, முதலிடத்திற்கு முன்னேறும். அதேசமயம், 2030ல், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதம் என்ற அளவில், மிதமாக காணப்படும்.


ஆசியா:

இந்தியா, 2030ல், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், சீனாவிற்கு அடுத்து, அமெரிக்காவை விஞ்சி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். அதேசமயம், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை, உலகின் 'டாப் 5' பொருளாதார நாடுகளில் தொடர்ந்து இடம் பெறும். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஆசிய பிராந்தியம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இது, 2030ல், 30 சதவீதமாக உயரும். ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில், முதல் ஐந்து இடங்களில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த, இந்தோனேஷியா இடம் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DN -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-201909:33:51 IST Report Abuse
DN நாடு வளர்ந்தால் நமக்கென்ன? வளராட்டியென்ன? நமக்கு🐂 மாடுபிடிச்சா🐂 போதும்.அதுவும் ஒரேமாட்டை😦 நூறுபேர். வாழ்க டுமீல். வளர்க🍻🥂 டாஸ்மாக்.?
Rate this:
Share this comment
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
16-ஜன-201908:47:48 IST Report Abuse
KumariKrishnan Bjp ஆனால், கள்ளப்பண ஒழிப்பு, பல வரிகளை ஒரே வரியாக குறைத்து வரி விகிதத்தையும் குறைத்த, ஆனால் கள்ள வியாபாரம், கடத்தல் வியாபாரம், வரி என விலை ஏற்றி அதை அரசுக்கு செலுத்தாமை போன்ற குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஜிஎஸ்டி வரிமுறை, வங்கிகளில் வட்டி குறைப்பு, வாராகடனை வசூல் செய்ய திவால் சட்டம், ஆகிய மோடியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன ஆனால், இதே நடவடிக்கைகள்தான் இந்திய அரசியல் கட்சிகள் மோடியிடம் அதிருப்தி கொள்வதற்கும் காரணம் காரணம் பொருளாதார குற்றங்களை செய்பவர்களாகவோ அல்லது அக் குற்றத்தை செய்வோரின் நன்பர்களாகவோ இந்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் இந்த குற்றவாளி அரசியலுக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இப்போது போட்டி நடக்கிறது நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கு மோடிதான் தலைமை தாங்குகிறார் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் மோடியைத்தான் ஆதரிக்கவேண்டும் -குமரிகிருஷ்ணன்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜன-201908:17:15 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏறிவிட்ட விலைவாசி உயர்வால் ஒண்ணும் வாங்க முடிவதில்லை... அதனால் பட்டினியால் வயிறு கிஞ்சுகிறது,, வறுமை மிஞ்சுகிறது... கால்கள் நிக்க கெஞ்சுகிறது,,,
Rate this:
Share this comment
sriwilli - jakarta,இந்தோனேசியா
16-ஜன-201909:26:45 IST Report Abuse
sriwilliஎங்கே ஓமான் ல யா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X