சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுப்பெண் தற்கொலை: உறவினர்கள் மறியல்

Added : ஜன 16, 2019
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, திருமணமான இரண்டு மாதங்களில், பெண் தற்கொலை செய்து கொண்டார்.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பிலிப்பாகுட்டையைச் சேர்ந்த கோவில் பூசாரி சுந்தரம் மகன் சபரீஸ்வரன், 24. தந்தைக்கு உதவியாக உள்ளார். கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், சபரீஸ்வரனுக்கும், முள்ளுக்குறிச்சியை சேர்ந்த, வரதராஜ் மகள் பரமேஸ்வரி, 18, என்பவருக்கும் திருமணம் நடந்தது.

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, திருமணமான இரண்டு மாதங்களில், பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பிலிப்பாகுட்டையைச் சேர்ந்த கோவில் பூசாரி சுந்தரம் மகன் சபரீஸ்வரன், 24. தந்தைக்கு உதவியாக உள்ளார். கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், சபரீஸ்வரனுக்கும், முள்ளுக்குறிச்சியை சேர்ந்த, வரதராஜ் மகள் பரமேஸ்வரி, 18, என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, தாய் வீட்டிற்கு செல்ல, பரமேஸ்வரி கேட்டுள்ளார். அதற்கு, சபரீஸ்வரன் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்தவர், நேற்று முன்தினம் இரவு, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். சடலம் பிரேத பரிசோதனைக்கு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையில் கூடிய பெண்ணின் உறவினர்கள், 'மரணத்தில் சந்தேகம் உள்ளது. சபரீஸ்வரனை கைது செய்ய வேண்டும்' எனக்கூறி, நேற்று மதியம், 12:00 மணிக்கு, சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, பரமேஸ்வரி தாய் சந்திரா கூறியதாவது: கடந்த சில வாரங்களாகவே, திருமணத்திற்கு நாங்கள் போடுவதாக கூறிய நகையை கேட்டு பரமேஸ்வரியை திட்டியும், மிரட்டியும் வந்துள்ளனர். நகை போட்டால் தான், பொங்கலுக்கு அனுப்புவோம் என, கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, சபரீஸ்வரனுக்கு உள்ள பழக்க வழக்கங்களை பரமேஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார். இதனால், சில வாரங்களாக கணவன் மனைவிக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் மகள் கோழை அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X